Railway Passengers Alert: ரயிலில் இவர்களுக்கு டிக்கெட் தேவையில்லை.. இலவசமாக பயணிக்கலாம்.. யார் தெரியுமா?

Published : Jun 06, 2026, 07:31 AM IST

Railway Passengers Alert: ரயிலில் பயணம் செய்யும் போது பலர் கவனிக்காத ஒரு விதி உள்ளது. குறிப்பிட்ட சிலருக்கு டிக்கெட் தேவையில்லை என்றாலும், ஒரு சிறிய தவறு அபராதத்திற்கு வழிவகுக்கலாம். என்ன அந்த விதி? என்று காண்போம்.

PREV
15
இலவச ரயில் பயணம்

ரயில் பயணம் இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. குறிப்பாக குடும்பத்துடன் பயணம் செய்யும் போது, ​​குழந்தைகளுக்கான டிக்கெட் விதிகள் குறித்து பலருக்கும் குழப்பம் ஏற்படுகிறது. "எந்த வயது வரை டிக்கெட் தேவையில்லை?", "ஹாஃப் டிக்கெட் எப்போது வாங்க வேண்டும்?", "தனி இருக்கை பெற முழு கட்டணம் கட்ட வேண்டுமா?" போன்ற கேள்விகள் அடிக்கடி எழுகின்றன. உண்மையில், இந்திய ரயில்வே இதற்கான தெளிவான வழிகாட்டுதல்களை ஏற்கனவே வகுத்து வைத்துள்ளது. ஆனால் அவை குறித்து பல பயணிகளுக்கு முழுமையான விழிப்புணர்வு இல்லை.

25
ரயில் டிக்கெட் விதிகள்

ரயில்வே விதிப்படி, 5 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு தனியாக டிக்கெட் வாங்க வேண்டிய அவசியமில்லை. பிறந்த குழந்தை முதல் 4 வயது வரை உள்ளவர்கள் பெற்றோருடன் இலவசமாக பயணம் செய்யலாம். இருப்பினும், இந்த சலுகையுடன் ஒரு நிபந்தனையும் இணைந்துள்ளது. குழந்தைக்கு தனி இருக்கை அல்லது படுக்கை வசதி ஒதுக்கப்படாது. பெற்றோரின் இருக்கையிலோ அல்லது படுக்கையிலோ உடன் பயணம் செய்ய வேண்டும். பெற்றோர் விரும்பினால், கூடுதல் வசதிக்காக தனி டிக்கெட்டையும் முன்பதிவு செய்யலாம்.

செவ்வாய் பெயர்ச்சி 2026: தொழில் முதல் திருமணம் வரை வெற்றி தரும் ராசிகள்! முழு லிஸ்ட்!

35
குழந்தைகள் ரயில் பயணம்

5 முதல் 12 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கான விதிகள் சற்று வேறுபடுகின்றன. இந்த வயதினருக்கு கட்டண சலுகை கிடைக்கலாம். ஆனால் தானாகவே தனி இருக்கை வழங்கப்படாது. பயணத்தின் போது குழந்தைக்கு தனிப்பட்ட இருக்கை அல்லது படுக்கை தேவைப்பட்டால், அதற்கேற்ற முழு கட்டண டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும். நீண்ட தூர பயணங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக இரவு நேர பயணங்களில் குழந்தைகளின் வசதிக்காக பல பெற்றோர் இந்த முறையை தேர்வு செய்கின்றனர்.

7 சீட்டர் கார் வாங்க காத்திருக்கிறீர்களா? மஹிந்திராவின் புதிய மாடல்கள் ரெடி

45
குழந்தைகள் டிக்கெட்

12 வயதுக்கு மேற்பட்டவர்கள் முழுமையான பயணிகளாக கருதப்படுகின்றனர். எனவே, அவர்களுக்கு முழு டிக்கெட் கட்டாயம். ஆன்லைன் முன்பதிவு செய்யும் போது குழந்தையின் வயதை சரியாக பதிவு செய்வது மிகவும் முக்கியம். வயது தொடர்பான தவறான தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால், டிக்கெட் பரிசோதனையின் போது சிக்கல். டிடிஇ வயது சான்று கேட்கும் அதிகாரமும் பெற்றுள்ளார்.

55
இந்தியன் ரயில்வே ரூல்ஸ்

அதனால், குடும்பத்துடன் ரயில் பயணம் செய்யும் முன் குழந்தைகளின் வயதுக்கேற்ப சரியான டிக்கெட் வகையை தேர்வு செய்வது அவசியம். சில ரூபாயை சேமிக்க முயற்சிப்பதை விட விதிமுறைகளை பின்பற்றுவது பாதுகாப்பானது. சரியான தகவலுடன் முன்பதிவு செய்தால் அபராதத்தை தவிர்க்க முடியும். அதே நேரத்தில் குழந்தைகளுக்கு பெற்றோருக்கும் சிரமமில்லாத, வசதியான மற்றும் மகிழ்ச்சியான பயண அனுபவத்தையும் உறுதி செய்ய முடியும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories