Published : Sep 10, 2024, 11:12 AM ISTUpdated : Sep 10, 2024, 11:33 AM IST
Aadhaar Card Update: பத்து ஆண்டுகளுக்கு முன் விநியோகிக்கப்பட்ட ஆதார் அட்டைகள் புதுப்பிக்கப்படாமல் இருந்தால், செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் அடையாளம் மற்றும் இருப்பிட சான்றிதழ்களை கொண்டு இலவசமாக புதுப்பிக்க வேண்டும்.
ஒரு மனிதன் உயிர் வாழ உணவு எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று ஒரு மனிதன் வாழ மட்டுமின்றி சுடுக்காட்டுக்கு சென்றாலும் ஆதார் அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. வங்கிக் கணக்கை தொடங்குவதற்கோ அல்லது மொபைல் சிம் பெறுவதற்கோ அல்லது அரசுத் திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்கும் ஆதார் அட்டை முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.
25
Aadhaar Card
இந்நிலையில் பத்து ஆண்டுகளுக்கு முன் விநியோகிக்கப்பட்ட ஆதார் அட்டைகள் ஒரு முறை கூட புதுப்பிக்கப்படாமல் இருந்தால் அடையாளம் மற்றும் இருப்பிட சான்றிதழ்களை கொண்டு அவற்றை புதுப்பிக்க வேண்டும் என்றும் இந்த நடவடிக்கையை செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் இலவசமாக மேற்கொள்ளலாம். அதன் பிறகு ஆதார் அட்டையை புதுப்பிக்க 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆதார் சேவை மையங்கள் மூலம் மட்டுமின்றி Myaadhaar.uidai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆதாரை இலவசமாக புதுப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஆதார் எண்ணையும், ஆதார் எண்ணோடு இணைக்கப்பட்டுள்ள செல்போனுக்கு ஒரு ஓடிபியை கொண்டு லாகின் செய்ய வேண்டும்.
45
aadhaar Website
பின்னர் ஆதார் இணையதளத்தில் உள்ள உங்களின் அடையாளம் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட சுய விவரங்களை சரி பார்க்க வேண்டும். அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக இருந்தால் I verify that the above detalisare correct அதாவது மேற்கண்ட தகவல் அனைத்தும் சரியானவை என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.
பின்னர் தாக்கல் செய்ய விரும்பும் அடையாளம் மற்றும் முகவரி சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். தாக்கல் செய்யும் ஆவணங்கள் 2 MB அளவுக்கு உட்பட்ட JPEG, PNG, அல்லது PDF வடிவில் இருக்க வேண்டும். இறுதியாக அனைத்து விவரங்களையும் சரிபார்த்துவிட்டு இணையதளத்தில் ஆவணங்களை பதிவேற்றம் செய்ததும் உங்கள் ஆதார் புதுப்பிக்கப்பட்டு விட்டது என்பதற்கான சான்றிதழை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.