Post Office Schemes
பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே சேமிப்புப் பழக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும். பொதுவாக, குழந்தைகளுக்கு சேமிப்பைக் கற்றுக்கொடுக்க, பணத்தை வீட்டில் உள்ள ஒரு உண்டியலில் போடச் சொல்வார்கள். உண்டியலில் சேமிப்பது கூடுதல் பலன் எதையும் தராது.
Post office Savings
ஆனால் வட்டியையும் சேர்த்துக் கொடுக்கும் உண்டியல் ஒன்று உள்ளது. குழந்தைகள் இந்த உண்டியலில் டெபாசிட் செய்தால் வட்டியும் கிடைக்கும். ரெக்கரிங் டெபாசிட் (RD) எனப்படும் தொடர் வைப்பு நிதி திட்டம் வட்டி கொடுக்கும் உண்டியல் போலத்தான் செயல்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை இத்திட்டத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். முதிர்வுத் தொகை வட்டியுடன் சேர்ந்து கிடைக்கும். குழந்தைகளுக்கு தாங்கள் சேமிக்கும் தொகை அதிகரித்துக் கிடைக்கும்போது அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். கூடவே தொடர்ந்து சேமிக்கவும் ஆர்வம் உண்டாகும்.
Recurring Deposit
வெவ்வேறு கால வரம்புடன் வங்கிகளிலும் RD வசதி உள்ளது. ஆனால் போஸ்ட் ஆபீஸ் RD 5 வருடங்களுக்கானது. இதற்கு 6.7 சதவீதம் வட்டியும் தருகிறது. குழந்தைகளின் சேமிப்புக்காக, போஸ்ட் ஆபிசில் ஒரு RD கணக்கு தொடங்கி முதலீடு செய்யலாம். மாதத்திற்கு வெறும் 100 ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு இல்லை.
Save 500 per month
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாதந்தோறும் 500 ரூபாய் டெபாசிட் செய்தால், ஒரு வருடத்தில் 6,000 ரூபாயும், 5 ஆண்டுகளில் 30,000 ரூபாயும் டெபாசிட் செய்ய வேண்டும். இதற்கு 6.7 சதவீதம் வட்டியாக 5,681 ரூபாய் கிடைக்கும். திட்டத்தின் முதிர்வின்போது மொத்தமாக 35,681 ரூபாய் பெற்றுகொள்ளலாம். ஆனால், இதே தொகையை 5 வருடமாக உண்டியலில் போட்டுக்கொண்டு வந்தால் ரூ.30,000 தான் கிடைக்கும். வட்டியின் பலன் கிடையாது.
RD account for children
இந்தத் திட்டத்தில் சேர குழந்தைகளை அழைத்துச் சென்று கணக்கு தொடங்கலாம். டெபாசிட் செய்வது எப்படி என்றும் சொல்லிக் கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தைகள் பணத்தை எப்படி முதலீடு செய்வது என்று புரிந்துகொள்வார்கள். 5 வருட RD முதிர்ச்சியடைய காத்திருக்க வேண்டும் என்பதால் குழந்தைகள் பொறுமையாக இருக்கவும் கற்றுக்கொள்வார்கள். முதிர்வுத்தொகை கிடைத்தவுடன் முதலீட்டுக்குக் கிடைத்த வட்டியால் பணம் பெருகியிருப்பதை குழந்தைகளுக்கு விளக்கிக் கூறலாம்.
Post office RD interest rate
அருகில் உள்ள எந்த தபால் நிலையத்திற்கும் என்று குழந்தையின் பெயரில் கணக்கைத் தொடங்கலாம். குழந்தை மைனராக இருந்தால் தாய் அல்லது தந்தை பெயரில் கணக்கு தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவர்கள் பெயரிலேயே கணக்கு தொடங்கலாம். கூட்டுக் கணக்கு வசதியும் உள்ளது. இது தவிர எத்தனை RD கணக்குகளும் தொடங்கலாம்.