நாடு என்ன தான் டிஜிட்டல் மயமாகிவிட்டாலும், மக்கள் ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை மேற்கொண்டாலும் வங்கிகளில் கூட்டம் குறைந்தபாடில்லை. மேலும் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் எரிவாயு உருளை மானியம், நூறு நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம், மகளிர் உதவித் தொகை என அனைத்தும் பொதுமக்களின் வங்கி கண்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவதால் வங்கிகளில் எப்பொழுதும் கூட்டத்திற்கு பஞ்சம் இல்லை.
அதிலும் குறிப்பாக கிராமப் பகுதிகளில் உள்ள வங்கிகளில் நூறு நாள் வேலை திட்டம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்ட பணியாளர்களுக்காக வேலை செய்வதற்காகவே தனி கவுண்ட்டர்களை ஓபன் செய்யலாம். அந்த அளவிற்கு கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.
இந்நிலையில் இந்த வார இறுதியில் அடுத்தடுத்து 3 தினங்களுக்கு விடுமுறை வருகிறது. வருகின்ற 14ம் தேதி இரண்டாவது சனிக் கிழமை, 15ம் தேதி ஞாயிற்றுக் கிழமை, 16ம் தேதி மிலாடி நபி ஆகியக் காரணங்களால் அடுத்தடுத்து 3 தினங்களுக்கு விடுமுறை வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு பயனடைந்து கொள்ளுங்கள்.