Post Office Recurring Deposit
சிறிய சேமிப்புகள் மூலம் பணத்தைத் திரட்ட விரும்பினால், எந்த விதமான ஆபத்தும் இல்லாத போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் சேரலாம். போஸ்ட் ஆபிஸ் RD 5 வருடங்களுக்கான திட்டம். 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் நிறைய சேமிக்க வாய்ப்பு உள்ளது.
Post Office RD interest rate
தற்போது, போஸ்ட் ஆபிசில் தொடர் வைப்பு நிதிக் கணக்குக்கான வட்டி விகிதம் 6.7 சதவீதம். இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.2000, ரூ.3000 அல்லது ரூ.5000 டெபாசிட் செய்தால், தற்போதைய வட்டி விகிதத்தின்படி எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பார்க்கலாம்.
Post office RD Monthly Rs. 5000
ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் RD ஐத் தொடங்கினால், 5 ஆண்டுகளில் மொத்தம் 3,00,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். போஸ்ட் ஆபிஸ் ஆர்டி கால்குலேட்டரின் படி, 6.7% வட்டியில் ரூ.56,830 கிடைக்கும். இந்த வழியில், முதிர்வு காலத்தில் கிடைக்கும் தொகை ரூ..3,56,830 ஆக இருக்கும்.
Post office RD Monthly Rs. 3000
மாதம் 3,000 ரூபாய் RD ஐ தொடங்கினால், ஒரு வருடத்தில் 36,000 ரூபாய் வீதம் 5 ஆண்டுகளில் மொத்தம் 1,80,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். போஸ்ட் ஆஃபீஸ் ஆர்டி கால்குலேட்டரின் படி, தற்போதைய வட்டி விகிதத்துக்கு ரூ. 34,097 வட்டியாகக் கிடைக்கும். இதன் மூலம் முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ. 2,14,097 பெறலாம்.
Post office RD Monthly Rs. 2000
ரூ.2,000 முதலீடு செய்தால்
5 ஆண்டுகளுக்கு மாதம் 2,000 ரூபாய் RD கணக்கு தொடங்கினால், ஆண்டுக்கு 24,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். 5 ஆண்டுகளில் முதலீடு செய்த அசல் தொகை 1,20,000 ரூபாயாக இருக்கும். இத்துடன் 5 வருடத்துக்கான 6.7% வட்டி ரூ.22,732 சேர்த்து ரூ.1,42,732 முதிர்வுத் தொகையைப் பெறலாம்.
Post office RD scheme interest review
மத்திய அரசின் நிதி அமைச்சகம் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்யும். அக்டோபர் 1, 2023 அன்று, அஞ்சல் துறை தொடர் வைப்புநிதி கணக்கிற்கான வட்டி விகிதம் 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
What if RD interest rate revised?
எந்த வட்டி விகிதத்தில் RD கணக்கு தொடங்கப்படுகிறதோ, அதே அளவுக்கு வட்டி 5 ஆண்டுகளுக்கும் கிடைக்கும். இடையில் RD வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டாலும், அது ஏற்கெனவே தொடங்கப்பட்ட கணக்குகளைப் பாதிக்காது.