ரூ.45 ஆயிரம் சம்பளம் ரூ.1.5 லட்சமாகுமா? அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் எப்போது? புதிய அப்டேட்

Published : May 29, 2026, 08:52 PM IST

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 8வது ஊதியக் குழு குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஊதிய நிலைகளின் அடிப்படையில் தனித்தனி ஃபிட்மென்ட் ஃபேக்டர்களைப் பயன்படுத்த ஒரு புதிய ஃபார்முலா முன்மொழியப்பட்டுள்ளது.

PREV
15
அரசு ஊழியர்களுக்கு புதிய ஜாக்பாட்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் 8வது ஊதியக் குழு குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த முறை, வழக்கமான சம்பள திருத்தத்தை விட பெரிய மாற்றம் உருவாகலாம் என்ற கணிப்புகள் விவாதத்தை சூடுபிடித்துள்ளன. குறிப்பாக ‘ஃபிட்மென்ட் ஃபேக்டர்’ எனப்படும் சம்பளக் கணக்கீட்டு முறை மீண்டும் கவனத்தின் மையமாக மாறியுள்ளது.

25
தனித்தனி ஃபிட்மென்ட் ஃபேக்டர்கள்

இந்த விவாதத்தில் முக்கிய பங்கேற்பு வரும் இந்திய ரயில்வே டெக்னிக்கல் சூப்பர்வைசர்ஸ் சங்கம், அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான உயர்வுக்கு பதிலாக, ஊதிய நிலைகளின் அடிப்படையில் தனித்தனி ஃபிட்மென்ட் ஃபேக்டர்களை பரிந்துரைத்துள்ளது. லெவல் 1 முதல் 5 வரை 2.92, லெவல் 6 முதல் 8 வரை 3.50, லெவல் 9 முதல் 12 வரை 3.80, லெவல் 13 முதல் 16 வரை 4.09 மற்றும் உயர்நிலை நிலை 17 முதல் 18 வரை 4.38 என்ற விகிதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

35
ஊழியர் சங்கங்களின் புதிய கோரிக்கை

இந்த புதிய ஃபார்முலா அமலுக்கு வந்தால் சம்பளத்தில் பெரிய மாற்றம் என தெரியவந்துள்ளது. உதாரணமாக, லெவல் 17 மற்றும் 18 பிரிவில் ரூ.2.5 லட்சம் அடிப்படை சம்பளம் பெறும் ஊழியரின் சம்பளம் சுமார் ரூ.10.95 லட்சமாக உயரக்கூடும் என்ற கணக்கீடுகள் பேசப்படுகின்றன. மேலும், லெவல் 6 முதல் 8 வரை ரூ.45 ஆயிரம் அடிப்படை சம்பளம் பெறுவோரின் வருமானமும் உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

45
அரசு ஊழியர் சம்பளம் அதிகரிப்பு

இதனுடன், தொழில்நுட்ப ரயில்வே ஊழியர்களுக்கு தனி ஊதிய அமைப்பு, விரைவான பதவி உயர்வு, ஆண்டுக்கு 5 சதவீத சம்பள உயர்வு மற்றும் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்தில் இணைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், தேசிய அளவிலான ஊழியர் அமைப்புகள் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை ரூ.69 ஆயிரம் முதல் ரூ.72 ஆயிரம் வரை உயர்த்த வேண்டும் என வலியுறுத்துகின்றன.

55
புதிய சம்பள ஃபார்முலா

குடும்பச் செலவுகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள சூழலில், ‘குடும்ப அலகு’ கணக்கீட்டை 3-லிருந்து 5 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்துள்ளது. 8வது ஊதியக் குழுவின் இறுதி பரிந்துரைகள், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பொருளாதார வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories