Dearness Allowance
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாக உள்ளது. அகவிலைப்படி எவ்வளவு உயர்த்தப்படும்? மொத்த சம்பளம் எவ்வளவு கிடைக்கும்? என்று பார்க்கலாம்.
Dearness Allowance Hike
மத்திய அரசு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இரண்டு முறை மாற்றி அமைக்கிறது. இது குறித்த அறிவிப்பு மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெளிவரும். அகவிலைப்படி உயர்வு அரியர் தொகையுடன் சேர்ந்து வழங்கப்படும். 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்ந்தால் அவர்களுக்கு மொத்தம் எவ்வளவு தொகை கிடைக்கும் என்று பார்க்கலாம்.
DA Hike
மத்திய பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த 8வது ஊதியக்குழு பற்றிய அறிவிப்பு ஏதும் இடம்பெறாத நிலையில், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அகவிலைப்படி உயர்வு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்படும். ஜூலை மாத அகவிலைப்படி உயர்வு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில்எ அறிவிக்கப்படும்.
Dearness Allowance Calculation
கடந்த முறை ஜனவரி மாத அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 4% உயர்த்தப்பட்டது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 50% ஆக அதிகரித்துத்து. இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) அடிப்பைடயில் பார்க்கும்போது ஜூலை மாத அகவிலைப்படியும் 4% கூடலாம் என்று தெரிகிறது.
DA Alert
அகவிலைப்படி 4% அதிகரித்தால், ரூ.18,000 அடிப்படைச் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.720 கூடுதலாகக் கிடைக்கும். ரூ.20,000 அடிப்படைச் சம்பளம் பெறுபவர் என்றால், மாதம் ரூ.800 அதிகரிக்கும். ரூ.25,000 அடிப்படைச் சம்பளம் வாங்குபவர்களுக்கு மாதம் ரூ.1,000 கூடும்.
Salary allowances
மாதாந்திர அடிப்படை சம்பளம் ரூ.30,000 என்றால் மாதம் ரூ.1,200, ரூ.40,000 என்றால் ரூ.1,600, ரூ.50,000 என்றால் ரூ.2,000, ரூ.60,000 என்றால் ரூ.2,400 மாதம் தோறும் அதிகாமகக் கிடைக்கும். ரூ.70,000 பெறும் ஊழியர்களுக்கு ரூ.2,800, ரூ.80,000 பெறும் ஊழியர்களுக்கு ரூ.3,200, ரூ.90,000 பெறும் ஊழியர்களுக்கு ரூ.3,600, ரூ.1,00,000 பெறும் ஊழியர்களுக்கு ரூ.4,000 மாதாமாதம் அதிகமாகக் கிடைக்கும்.
Salary and DA calculations
ரூ.1,25,000 மாதச் சம்பளத்துக்கு ரூ.5,000, ரூ.1,50,000 மாதச் சம்பளத்துக்கு ரூ.6,000, ரூ.1,75,000 மாதச் சம்பளத்துக்கு ரூ.7,000, ரூ.2,00,000 மாதச் சம்பளத்துக்கு ரூ.8,000, ரூ.2,25,000 மாதச் சம்பளத்துக்கு ரூ.9,000, ரூ.2,50,000 மாதச் சம்பளத்துக்கு ரூ.10,000 அதிகரிக்கும்.dearness allowance