ஆர்பிஎல் வங்கி
இந்த வங்கியின் சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் மிக உயர்ந்ததாக உள்ளது. 7.5 சதவீதம் வட்டி தரப்படுகிறது. இருப்பினும், இது ரூ.25 லட்சம் முதல் ரூ.3 கோடி வரையிலான இருப்புகளுக்குத்தான் பொருந்தும். ரூ.1 லட்சம் வரையிலான இருப்புகளுக்கு 3.5 சதவீதமும், ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வைப்புகளுக்கு 4.5 சதவீதமும் கிடைக்கும். ரூ.5-10 லட்சம் வரையிலான இருப்பைப் பராமரிக்கும் கணக்குதாரர்களுக்கு 5.5 சதவீதமும், ரூ.10-25 லட்சம் வரை பேலன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு 6.5 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.