Published : Apr 22, 2025, 09:17 AM ISTUpdated : Apr 22, 2025, 09:22 AM IST
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது, செலவு விகிதம் ஒரு முக்கியமான காரணி. இது உங்கள் வருமானத்தைப் பாதிக்கும் என்பதால், குறைந்த செலவு விகிதம் கொண்ட ஃபண்டுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம். சந்தை நிலையற்றதாக இருக்கும்போது இது மிகவும் முக்கியமானது.
ஒரு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது , பொதுவாக நாம் முதலில் குறிப்பிட்ட ஃபண்ட் வெவ்வேறு காலகட்டங்களில் அளித்த வருமானம், ஃபண்ட் ஹவுஸின் நற்பெயர் மற்றும் ஃபண்ட் மேலாளரின் அனுபவம் போன்ற முக்கிய விஷயங்களைப் பார்க்கிறோம்.
ஆனால் ஒரு சிறிய விஷயம் நமக்கு அடிக்கடி மறைந்துவிடும். அதுதான் 'செலவு விகிதம்'. முதலீட்டை நிர்வகிப்பதற்கு ஈடாக நிதி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உங்களிடம் வசூலிக்கும் கட்டணம் இது. இது ஒரு சிறிய தொகையாகத் தோன்றினாலும், உண்மையில், அது உங்கள் வருவாயை மெதுவாகக் குறைத்துவிடும்.
24
How expense ratio affects returns?
அதிக செலவு விகிதம் வருமானத்தைப் பாதிப்பது எப்படி?
உதாரணமாக, ஒரு நிதியின் செலவு விகிதம் 1% என்றால், ஒவ்வொரு 100 ரூபாய் முதலீடுக்கும் ஆண்டு கட்டணமாக ரூ.1 கழிக்கப்படும் என்று அர்த்தம். இந்தக் கட்டணம் நேரடியாக நிதியின் நிகர சொத்து மதிப்பில் (NAV) இருந்து கழித்துக்கொள்ளப்படும். முதலீட்டாளர் தனியாக பணம் செலுத்த வேண்டியதில்லை.
கடந்த 7 மாதங்களாக சந்தை நிலைமையைப் பார்த்தால், உலகளவில் பங்குகள் அழுத்தத்தில் உள்ளன. உள்நாட்டு சந்தையில் முன்னணி பங்கு குறியீடுகள் கணிசமாகச் சரிந்துள்ளன. பங்குகளின் செயல்திறன் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நேரங்களில், முதலீடு செய்யும் பணத்தின் ஒவ்வொரு சதவீதமும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில், உங்கள் வருமானத்தை முதலில் பாதிப்பது செலவு விகிதம் ஆகும்.
சந்தை நிலையற்றதாக இருக்கும்போது, ஒவ்வொரு சிறிய செலவும் உங்கள் மொத்த வருவாயைப் பாதிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அதிக செலவு விகிதத்தைக் கொண்ட ஃபண்டுகள் அந்தச் செலவை ஈடுகட்டும் அளவுக்குச் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.
இப்போது குறைவான செலவு விகிதம் கொண்ட, சிறந்த வருமானத்தை அளித்த மியூச்சுவல் ஃபண்டுகளைப் பற்றிப் பார்க்கலாம். இந்த ஃபண்டுகள் அனைத்தும் கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தது 20% க்கும் அதிகமாக வருமானம் கொடுத்திருக்கின்றன. அதிகபட்சமாக 26% வரை வருமானத்தை அளித்துள்ளன.
44
Top 5 funds with low expense ratio
டாப் 5 மியூச்சுவல் ஃபண்டுகள்:
2025ஆம் ஆண்டில் மிகக் குறைந்த செலவு விகிதம் மற்றும் சிறந்த 5 ஆண்டு வருமானம் கொண்ட டாப் 5 மியூச்சுவல் ஃபண்டுகள்: