தங்கம் விலை ₹1 லட்சத்தைத் தொட்டது: புதிய உச்சம் - நகைப்பிரியர்கள் அதிர்ச்சி

Published : Apr 22, 2025, 10:21 AM IST

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் மற்றும் முதலீட்டாளர்களின் அதிகரித்த தேவையால், தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ₹1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

PREV
15
தங்கம் விலை ₹1 லட்சத்தைத் தொட்டது: புதிய உச்சம் - நகைப்பிரியர்கள் அதிர்ச்சி

Gold and silver price today: அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையே உருவாகும் வர்த்தக சிக்கல்கள், உலக சந்தையில் பொருளாதார பதற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. இதன் தாக்கம் இந்தியாவின் தங்க சந்தையிலும் தெளிவாகக் காணப்படுகிறது. முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடு எனக் கருதுவதால், அதன் தேவை தொடர்ந்து உயரும் நிலையில், தங்கத்தின் விலை புதிய உச்சத்தைக் கடந்துவிட்டது.

25
gold price drop

இன்றைய தங்கம் விலை நிலவரம்

இந்திய புலியன் அசோசியேஷன் (IBA) வெளியிட்ட தரவுகளின்படி, ஏப்ரல் 22, 2025 காலை 7 மணி நேர நிலவரப்படி 24 காரட் தூய தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹97,560 ஆக இருக்கிறது. இதில் 3% ஜிஎஸ்டி சேரும் போது, ​​விற்பனை விலை ₹1,00,468.80 ஆகிறது. இது தங்க விலை முதன்முறையாக ₹1 லட்சத்தை தொட்டிருக்கும் முக்கிய தருணமாகும்.

35
Gold Rate Hike

தங்கத்தின் விலை அதிகரிப்பு

இதேநேரத்தில், 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹89,430 ஆகவும், அதற்கு 3% ஜிஎஸ்டி சேரும் போது விற்பனை விலை ₹92,112.90 ஆகவும் உள்ளது. இந்த உயர்வான விலை நிலவரம், தங்கம் மீது உள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. குறிப்பாக பெங்களூரு, சென்னை, மும்பை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் இது சதமடித்துள்ளது.

45
Silver Rate Today

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலை உள்ளிட்ட புள்ளிவிவரங்களும் சர்வதேச சந்தையின் பாதிப்பை காட்டுகின்றன. IBA வலைதளத்தின் தகவலின்படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹95,720 ஆகும் என பதிவாகியுள்ளது. இது கடந்த சில வாரங்களில் வெள்ளியின் தேவை மற்றும் சந்தை நிலவரத்தையும் பிரதிபலிக்கிறது.

55
Chennai Gold Price Today

சென்னையில் தங்கத்தின் விலை

சென்னையில் இன்றைய (22 ஏப்ரல்) ஆபரணத் தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. சவரன் ₹2,200 உயர்ந்த நிலையில், 8 கிராமுக்கு ₹74,320 ஆக விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ₹275 உயர்ந்து ₹9,290 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம்.

7 பங்குகளில் முதலீடு செய்து பணக்காரர் ஆகுங்கள்! இல்லைனா வருத்தப்படுவீங்க!

Read more Photos on
click me!

Recommended Stories