அள்ள அள்ளப் பணம்... 5 வருட பிக்ஸட் டெபாசிட்டில் தாராளமான வட்டி கொடுக்கும் வங்கிகள்!

First Published | Sep 2, 2024, 11:27 PM IST

வங்கியில் நிலையான வைப்பு நிதி கணக்கைத் திறக்க நினைக்கிறீர்களா? சில வங்கிகள் 5 ஆண்டுகளுக்கான பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

பாரத ஸ்டேட் வங்கி

எஸ்பிஐ பொது குடிமக்களுக்கு 6.5% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டி வழங்குகிறது. இருப்பினும், 2-3 வருட பிக்ஸ்ட் டெபாசிட்களில், பொது குடிமக்கள் 7% மற்றும் மூத்த குடிமக்கள் 7.5% வட்டி விகிதத்தைப் பெறுகிறார்கள்.

பேங்க் ஆஃப் பரோடா

பாங்க் ஆஃப் பரோடா, ஐந்தாண்டு கால பிக்ஸட் டெபாசிட்களுக்கு, சாதாரண குடிமக்களுக்கு 6.5% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.15% வட்டி அளிக்கிறது. அதே நேரத்தில், 399 நாட்களுக்கான மான்சூன் தமாகா திட்டத்தின் கீழ், சாதாரண குடிமக்கள் 7.25% வட்டி மற்றும் மூத்த குடிமக்கள் 7.75% வட்டி பெறலாம்.

Tap to resize

ஹெச்டிஎஃப்சி வங்கி

ஹெச்டிஎஃப்சி வங்கி ஐந்தாண்டு கால பிக்ஸட் டெபாசிட்களுக்கு சாதாரண குடிமக்களுக்கு 7% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டியும் வழங்குகிறது. அதே நேரத்தில் 55 மாத FD இல் சாதாரண குடிமக்கள் 7.4% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.9% வட்டி கிடைக்கும்.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி ஐந்தாண்டு கால பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் சாதாரண குடிமக்களுக்கு 7% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டியும் வழங்குகிறது. இது தவிர, 15 முதல் 18 மாதங்கள் வரையிலான மியூச்சுவல் ஃபண்ட் பிக்ஸட் டெபாசிட்களுக்கு 7.25% முதல் 7.8% வரை வட்டி கிடைக்கும்.

கோடக் மஹிந்திரா வங்கி

கோடக் மஹிந்திரா வங்கி ஐந்தாண்டு கால பிக்ஸட் டெபாசிட்களில் பொது குடிமக்களுக்கு 6.2% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 6.7% வட்டி வழங்குகிறது. வங்கியின் அதிகபட்ச வட்டி விகிதம் 7.4% ஆகும். இது 390 நாள் பிக்ஸட் டெபாசிட்களில் வழங்கப்படுகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி

பி.என்.பி. வங்கி அதன் ஐந்தாண்டு நிலையான வைப்புநிதித் திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 6.5% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7% வட்டியும் வழங்குகிறது. இந்த வங்கி 400 நாள் FD க்கு 7.25% வட்டியையும் வழங்குகிறது.

இந்த வங்கிகள் அனைத்தும் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான பிக்ஸட் டெபாசிட்களுக்கு அதிக வட்டியைத் தருகின்றன. பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தால் வங்கிகளின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்த்து முடிவு எடுப்பது பயனளிக்கும்.

Latest Videos

click me!