ஓய்வுக்குப் பிறகும் ரூ.60000 வருமானம் வேண்டுமா? இன்றே இதில் முதலீடு செய்யுங்கள்!

First Published | Sep 2, 2024, 9:23 AM IST

ஓய்வுக்குப் பிறகு நிதி சுதந்திரத்தை அடைய, ஒவ்வொரு மாதமும் ரூ.60,000 வழக்கமான வருமானம் பெற ஒரு சிறந்த வழியை இந்த பதிவு விவரிக்கிறது. தொடர்ச்சியான முதலீடு மற்றும் சரியான நிதி திட்டமிடல் மூலம் இதை எவ்வாறு அடைய முடியும் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

உங்கள் ஓய்வுக்குப் பிறகும் ஒவ்வொரு மாதமும் ரூ.60,000 வழக்கமான வருமானம் பெற விரும்பினால், இந்த வழியில் பணத்தை டெபாசிட் செய்வதன் மூலம் இந்த இலக்கை அடையலாம்.

ஓய்வு காலத்தில் நல்லபடியாக வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையான பல விஷயங்கள் உள்ளன. ஆனால், மிக முக்கியமான விசயம் பணம். ஓய்வுக்குப் பிறகு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ, உங்களுக்கு ஒரு பெரிய நிதி தேவை, அதில் இருந்து அவ்வப்போது உங்கள் தேவைக்கேற்ப பணத்தை எடுக்கலாம். ஓய்வு பெற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் 60,000 ரூபாய் திரும்பப் பெறக்கூடிய ஒரு தந்திரத்தைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். தொடர்ந்து படியுங்கள் .

அதுமட்டுமின்றி, உங்கள் முதலீடு பணம் வளர்ந்து கொண்டே இருக்கும். பல வருடங்கள் கழித்து நீங்கள் திரும்பப் பெறும் போது, நீங்கள் முதல் முறையாக முதலீடு செய்ததை விட அதிகமாக சேர்த்திருப்பீர்கள். இதற்காக ஒவ்வொரு மாதமும் ரூ.15,000 முதலீடு செய்ய வேண்டும். இதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

15 சதவீத வருடாந்திர லாபத்தை அளிக்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்டில் (Mutual Fund) ஒவ்வொரு மாதமும் ரூ.15,000 முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஃபண்ட் நன்றாக இருந்தால் நீண்ட காலத்திற்கு உங்கள் இலக்கை அடைவது கடினமானதாக இருக்காது. 16 ஆண்டுகள் முதலீடு செய்த பிறகு, உங்கள் மொத்த முதலீடு ரூ.28,80,000 ஆகிவிடும். இதன் மூலம் உங்களுக்கு சுமார் 80 லட்சம் ரூபாய் வருமானமும் கிடைக்கும்.

Tap to resize

இப்போது அடுத்த முதலீடு

இப்போது இந்த பணத்தை குறைந்த ரிஸ்க் முதலீட்டு விருப்பத்தில் மீண்டும் முதலீடு செய்யுங்கள். 8-9 சதவீதம் வருமானம் பெறக்கூடிய எந்த ஒரு மியூச்சுவல் ஃபண்டிலும். இப்போது நீங்கள் முதலீடு செய்த ரூ.1 கோடியில் ஒவ்வொரு மாதமும் ரூ.60,000 திரும்பப் பெருவீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 40 ஆண்டுகளில் ரூ.2.88 கோடியை நீங்கள் திரும்பப் பெறுவீர்கள் அதேவளையில் 8 சதவீத வருடாந்திர வருமானம் காரணமாக, உங்கள் டெபாசிட் இன்னும் ரூ.5 கோடிக்கு மேல் பெருகியிருக்கும்.

குறிப்பு ; முதலீடு செய்வதற்கு முன் உங்கள் முதலீட்டு ஆலோசகரை தொடர்புகொள்ளங்களு. நிதி இழப்பு அபாயங்களுக்கு உட்பட்டது.

வரலாறு காணாத உச்சம் தொட்ட அன்னியச் செலாவணி கையிருப்பு! இறக்குமதி பற்றி கவலையே வேண்டாம்!!
 

Latest Videos

click me!