தனிநபர் கடன், வீட்டுக் கடன் அல்லது கிரெடிட் கார்டு எதுவாக இருந்தாலும், குறைந்த வட்டியில் நிதி பெறலாம். மேலும், உங்கள் மீது வங்கிக்கு நம்பிக்கை இருப்பதால், கடன் தொகை அல்லது கிரெடிட் லிமிட் அதிகமாக இருக்கலாம். அதிக ஸ்கோர் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கடன் ஒப்புதலுக்கு குறைந்த நேரமே ஆகும். குறிப்பாக அவசர காலங்களில், உடனடியாகப் பணம் தேவைப்படும்போது, உங்கள் விண்ணப்பம் உடனடியாக அங்கீகரிக்கப்படலாம்.