ஆண்டுக்கு 15 சிலிண்டருக்கு மேல் வாங்க முடியாதா? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
சமையல் கேஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ஆண்டுக்கு 15 சிலிண்டர்களுக்கு மேல் பயன்படுத்தினால் பதிவு செய்ய முடியாது என தகவல் பரவி வருகிறது.
சமையல் கேஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ஆண்டுக்கு 15 சிலிண்டர்களுக்கு மேல் பயன்படுத்தினால் பதிவு செய்ய முடியாது என தகவல் பரவி வருகிறது.
விறகு அடுப்பு காலம் போய் தற்போது பெரும்பாலான வீடுகளில் சமையல் கேஸ் சிலிண்டர்கள் உபயோகிக்கப்படுகின்றன. சமையல் சிலிண்டர் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு தரப்பிலிருந்து உஜ்வாலா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.
இந்நிலையில் சமையல் சிலிண்டர் இணைப்பு வாங்கிய பிறகு இரண்டு சிலிண்டர்கள் வரை வாங்கிக் கொள்கின்றனர். பெரும்பாலான மக்கள் ஒரே ஒரு சிலிண்டரை மட்டும் வைத்துக் கொண்டு சமாளிக்கின்றனர். இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் ஒரு மாதத்துக்கு ஒரு சிலிண்டர் என்ற வீதத்திலும், பல வீடுகளில் ஒரு மாதத்தில் இரண்டு சிலிண்டர்கள் வரை கூட உபயோகிக்கின்றனர். ஒரு மாதத்துக்கு ஒரு சிலிண்டர் என பார்த்தால் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை பெரும்பாலான மக்கள் வாங்குகின்றனர்.
இந்நிலையில், ஆண்டுக்கு 15 சிலிண்டர்கள் பயன்படுத்திவர்கள் அதற்கு மேல் சிலிண்டருக்கு பதிவு செய்யும் போது அன்புள்ள வாடிக்கையாளரே உங்கள் சமையல் கேஸ் சிலிண்டருக்கான பதிவை ஏற்க முடியாது. ஏனெனில், ஏற்கனவே ஆண்டு ஒதுக்கீட்டான 213 கிலோவை பயன்படுத்தி விட்டீர்கள் என இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் எஸ்எம்எஸ் தகவல் அனுப்பப்படுவதாக தகவல்கள் பரவி வருகின்றன.