இந்த நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் முதல் ஓபன் நாமினேஷன் இன்று நடைபெற்றுள்ளது. அதில், இந்த சீசனின் முதல் ஓபன் நாமினேஷன் நடைபெறுவதாக பிக் பாஸ் அறிவிக்கிறார். இதையடுத்து, போட்டியாளர்கள் தாங்கள் வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்று நினைக்கும் சக போட்டியாளர்களின் பெயர்களை அனைவர் முன்னிலையிலும் தெரிவிக்கின்றனர். அதற்கான காரணங்களையும் நேரடியாகக் கூறுவதால் வீட்டிற்குள் பரபரப்பான சூழல் உருவாகிறது.
அதன்படி முதலாவதாக வந்த லட்சுமி பிரியா, வைல்டு கார்டு போட்டியாளரான கரிஷ்மாவை நாமினேட் செய்துள்ளார். அவர் கடந்த வாரம் ஷமாவின் சீக்ரெட் டீலிங் பற்றி சொன்னதால் மிகப்பெரிய பிரச்சனை வெடித்தது. அதனால் கரிஷ்மாவை நாமினேட் செய்துள்ளார் லட்சுமி பிரியா. இதையடுத்து ஜேசனும், வினோத்தும் ஒருவரை ஒருவர் மாறி மாறி நாமினேட் செய்துகொண்டனர். பின்னர் வந்த சாந்தினி அவினாஷை நாமினேட் செய்தார். அவர் அக்ஷிதாவின் எண்ட்ரிக்கு பின் ஆக்ரோஷமாக விளையாடுவதாக கூறினார்.
இதுதவிர டிடிஎஃப் வாசன், ஷமா, ஷாதிகா, அக்ஷிதா, ஆகியோரும் இந்த வாரம் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். இதுவரை ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தவர்கள் கூட இந்த நாமினேஷனில் எதிரெதிராக நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், ஆறாவது வாரத்தின் தொடக்கமே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.