பிக்பாஸ் 6 பைனலில் திடீர் டுவிஸ்ட்... யாரும் எதிர்பார்க்காத போட்டியாளர் டைட்டிலை தட்டிச் சென்றார்

First Published | Jan 22, 2023, 6:36 PM IST

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பிக் பாஸ் 6 வின்னர் யார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலம் வாய்ந்த, ரசிகர்களின் அபிமான வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முக்கிய இடம் உள்ளது. அதுவும் உலக நாயகன் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவதும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதன் முதலில் தமிழில் பிக் பாஸ் சீசன் தொடங்கப்பட்டது. மற்ற மொழிகளில் இதுவரையில் ஏராளமான சீசன்கள் ஒளிபரப்பாகி இருந்தாலும் தமிழில் ஒளிபரப்பான நிகழ்ச்சிக்கு வரவேற்பு உச்சத்தில் இருந்தது. தொடர்ந்து தற்போது 6வது சீசன் ஒளிபரப்பானது.

Tap to resize

ஒவ்வொரு சீசன் போலவே, இந்த சீசனிலும் பல விறுவிறுப்பான நிகழ்வுகளும், சண்டைகளும், சமர்சங்களும், நட்பு, பாசம், காதல் போன்ற உணர்வுகளும் அதிகமாக காணப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பிக்பாஸ் தமிழ் 6 இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவுக்கு டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுள்ளது.

அசீம் மற்றும் தனாவின் சண்டைகள் இந்த ரேடிங்குக்கு முக்கிய காரணமாக இருந்தது என்றும் தகவல் வெளியாகியது. இதற்கிடையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6-ன் வெற்றியாளர் யாராக இருப்பார் என்பது பற்றிய பேச்சு சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகின்றது.

விக்ரமன்,ஷிவின், அசீம் ஆகிய மூவரில் யார் பிக்பாஸ் கோப்பையை வெல்லுவார்கள் என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில் அசீம் பிக்பாஸ் 6 பைனலில் வின்னராக வெற்றிபெற்றுள்ளார் அசீம். ரன்னராக விக்ரமன், 3வதாக ஷிவினும் இடம் பெற்றுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Latest Videos

click me!