தமிழ் பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிகபட்ச பணத்தொகையுடன் வெளியேறினார் அமுதவாணன் - அதுவும் இத்தனை லட்சமா?

First Published | Jan 20, 2023, 10:29 AM IST

பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிக தொகையுடன் கூடிய பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிய போட்டியாளர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் அமுதவாணன்.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. 21 போட்டியாளர்களுடன் ஆரவாரமாக தொடங்கிய இந்நிகழ்ச்சியில் ஷிவின், விக்ரமன், அமுதவாணன், அசீம், மைனா, கதிரவன் ஆகிய 6 போட்டியாளர்கள் மட்டுமே இறுதி வாரம் வரை சென்றனர். இது இறுதி வாரம் என்பதால் இந்த வாரம் முழுக்க எலிமினேட் ஆன மற்ற போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை ஒவ்வொரு சீசன் இறுதியிலும் பணப்பெட்டி அனுப்பப்படும். அந்த பெட்டியில் உள்ள பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேற நினைக்கும் போட்டியாளர்கள் வெளியேறலாம். நேரம் கூட கூட பணத்தின் மதிப்பும் அதிகரிக்கப்படும். இதுவரை நடந்து முடிந்துள்ள 5 சீசன்களில் கவின், கேப்ரியல்லா மற்றும் சிபி ஆகியோர் மட்டுமே பணப்பெட்டியுடன் வெளியேறி உள்ளனர்.

Tap to resize

அதேபோல் இந்த சீசனிலும் இந்த வார தொடக்கத்தில் பணமூட்டை ஒன்று வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டது. 3 லட்சம் தொகையுடன் அந்த பணமூட்டை வந்திருந்தது. அது வந்த சில நிமிடங்களிலேயே அதனை எடுத்துக்கொண்டு வெளியேறினார் கதிரவன். பிக்பாஸ் வரலாற்றிலேயே குறைந்தபட்ச பணத்துடன் வெளியேறிய போட்டியாளர் இவர் ஆவார்.

இதையும் படியுங்கள்... சல்மான் கான் முதல் தீபிகா படுகோனே வரை... அம்பானி மகனின் திருமண நிச்சயதார்த்தத்தில் அணிவகுத்த பாலிவுட் பட்டாளம்

அனைத்து சீசன்களிலும் ஒருமுறை மட்டுமே அனுப்பப்படும் பணப்பெட்டி இந்த சீசனில் மட்டும் இரண்டாவது முறையாக அனுப்பப்பட்டது. அதன்படி 3 லட்சம் தொகையுடன் வந்த பணப்பெட்டியின் மதிப்பு ஒரு நிமிடத்துக்கு ரூ.2500 கூடிக்கொண்டே இருந்தது. அந்த வகையில், இன்று ரூ.13 லட்சத்தை எட்டிய உடன் அந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறி உள்ளார் அமுதவாணன்.

இதன்மூலம் பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிக தொகையுடன் கூடிய பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிய போட்டியாளர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் அமுதவாணன். இதற்கு முன் நடந்த 5-வது சீசனில் சிபி சந்திரன் ரூ.12 லட்சம் பணத்துடன் வெளியேறியதே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது அமுதவாணன் அதனை முறியடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... விக்ரமனுக்கு எதிராக பேசியதால் மிரட்டல் விடுத்த விசிகவினர்... ‘யாருக்கும் பயந்தவ நானில்ல’ கெத்து காட்டும் வனிதா

Latest Videos

click me!