தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி 11-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் முழுவதும் வீட்டிற்குள் நடைபெற்ற சம்பவங்கள், போட்டியாளர்களின் விளையாட்டு அணுகுமுறை மற்றும் அவர்களுக்கிடையேயான பிரச்சினைகள் குறித்து இன்றைய எபிசோடில் விஜய் சேதுபதி பேச உள்ளார்.
இதுதொடர்பாக நிகழ்ச்சிக் குழு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் புதிய புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பிக்பாஸ் வீட்டில் சில போட்டியாளர்கள் நிகழ்ச்சி தொடங்கியபோது எந்த மனநிலையிலும், எந்த வேகத்திலும் விளையாடினார்களோ அதே நிலையிலேயே இப்போதும் தொடர்வதாக விஜய் சேதுபதி குறிப்பிடுகிறார்.
மேலும், இந்த வாரத்தில் சில போட்டியாளர்கள் தங்களது விளையாட்டை மேம்படுத்தி முன்னேறியுள்ளதாகவும் அவர் கூறுகிறார். அதேசமயம், தங்களுடைய ஆட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை மற்றவர்களுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டிய சூழலில் சில போட்டியாளர்கள் இருப்பதாகவும் புரோமோவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.