அதிலும் குறிப்பாக, கடந்த வார கேப்டனாக இருந்த ஜேசன், தன்யா கேப்டனாக அறிவிக்கப்பட்ட உடனேயே விதிமுறைகளை மீறி செயல்படத் தொடங்குகிறார். இதனால் தன்யாவை வேண்டுமென்றே வெறுப்பேற்றுகிறாரா அல்லது அவரது தலைமைப் பண்பைச் சோதிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தன்யா, இந்தச் சவால்களை எப்படிச் சமாளிக்கப் போகிறார்? வீட்டில் விதிமுறைகளை மீறுபவர்களைக் கட்டுப்படுத்துவாரா? அல்லது போட்டியாளர்களின் எதிர்ப்பால் புதிய பிரச்சினைகள் உருவாகுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த வாரம் நாமினேஷனில் 7 போட்டியாளர்கள் சிக்கி உள்ளனர். தன்யா கேப்டன் ஆனதால் அவர் நாமினேஷனில் இல்லை. அடுத்ததாக கடந்த வாரம் ஜூனியர் பாஸ் ஆக செயல்பட்ட வினோத் பாபு மற்றும் அன்சர் ஆகியோர் நாமினேஷனில் இடம்பெறவில்லை. எஞ்சியுள்ள ஜேசன், டிடிஎஃப் வாசன், லட்சுமி பிரியா, ஷாதிகா, முகேஷ், முனியம்மா, பிருத்வி ஆகிய 7 பேரும் நாமினேஷனில் சிக்கி உள்ளனர். அநேகமாக இந்த வாரம் ஜேசன் டேஞ்சர் ஜோனில் சிக்க அதிகம் வாய்ப்பு உள்ளது.