Bigg Boss 10 : ஜோடியாக எலிமினேட் செய்யப்பட்ட முகேஷ் - சாதிகாவுக்கு பிக் பாஸ் வாரி வழங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published : Nov 23, 2026, 12:51 PM IST

Bigg Boss Mukesh and Shatiga Salary : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து நேற்று எலிமினேட் ஆன முகேஷ் மற்றும் சாதிகாவின் சம்பள விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
Bigg Boss Mukesh and Shatiga Salary

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிகழ்ச்சிகளில் முக்கியமானது பிக் பாஸ் தமிழ் சீசன் 10. நடிகர் விஜய் சேதுபதி இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முன்பு முதல் ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், எட்டாவது சீசன் முதல் விஜய் சேதுபதி அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தற்போது 77 நாட்களைக் கடந்துள்ளது. இறுதிக்கட்டத்தை நோக்கி நிகழ்ச்சி நகர்ந்து கொண்டிருப்பதால் ஒவ்வொரு வாரமும் போட்டி மேலும் கடுமையாகி வருகிறது. அந்த வகையில், கடந்த வாரம் வீட்டிற்குள் 10 போட்டியாளர்கள் மட்டுமே இருந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களைப் போலவே மீண்டும் டபுள் எவிக்‌ஷன் நடைபெற்றுள்ளது.

25
11-வது வாரத்தில் வெளியேறிய சாதிகா

சாதிகா மற்றும் முகேஷ் ஆகிய இருவரும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளனர். நேற்று விஜய் சேதுபதி, நாமினேஷனில் இடம்பெற்றுள்ள அனைவரையும் வீட்டிற்கு வெளியே வருமாறு அழைத்தார். அங்கு ஒவ்வொருவரின் முகமும் இடம்பெற்ற பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன, அதில் அவர்களுக்கான ரிசல்ட் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து போட்டியாளர்கள் தங்களது முகம் இடம்பெற்ற பொம்மைகளில் வைக்கப்பட்டிருந்த சீட்டுகளை எடுத்துப் பார்த்தனர். அதில் வாசன் மற்றும் ஜேசன் ஆகியோர் காப்பாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் சாதிகாவின் சீட்டில் 'Evicted' எனக் குறிப்பிடப்பட்டிருந்ததால் அவர் முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

35
முகேஷுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சாதிகா வெளியேற்றப்பட்டதுடன் இந்த வார எவிக்ஷன் முடிந்துவிட்டதாகப் போட்டியாளர்கள் நினைத்திருந்தனர். ஆனால், இன்னும் ஒரு போட்டியாளர் வெளியேற வேண்டியிருப்பதாக விஜய் சேதுபதி அறிவித்ததும் வீட்டிற்குள் பதற்றம் அதிகரித்தது. தொடர்ந்து நடைபெற்ற அறிவிப்பில் முகேஷ் வெளியேற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ன் 11-வது வாரத்தில் சாதிகா மற்றும் முகேஷ் என இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் சர்ச்சை எழுந்தது. ஆனால் தாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே என்று சாதிகா திட்டவட்டமாக கூறினார்.

45
முகேஷ் - சாதிகாவின் சம்பளம் எவ்வளவு?

பிக் பாஸ் வீட்டில் முதல் நாளே எண்ட்ரி கொடுத்த முகேஷ், 77 நாட்கள் வரை அங்கிருந்துள்ளார். இதனால் அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி பார்த்தால் 77 நாட்களுக்கு 9 லட்சத்து 24 ஆயிரம் சம்பளமாக பெற்றிருக்கிறார். மறுபுறம் சாதிகா முகேஷை விட அதிக சம்பளம் வாங்கி இருக்கிறார். அவர் ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக பெற்றுள்ளார். அதன்படி பார்த்தால் 77 நாளுக்கு ரூ.15 லட்சத்து 40 ஆயிரம் சம்பளமாக பெற்றிருக்கிறாராம் சாதிகா.

55
தொடர்ந்து மூன்றாவது வாரமாக டபுள் எவிக்ஷன்!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் கடந்த மூன்று வாரங்களாகவே டபுள் எவிக்‌ஷன் நடைபெற்றது. இதனால் போட்டியாளர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்து, இறுதிப்போட்டிக்கான போட்டி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் நிறைவடைய உள்ள நிலையில், மீதமிருக்கும் போட்டியாளர்களில் யார் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று டைட்டில் வின்னராக மாறப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் இன்னும் என்னென்ன திருப்பங்கள் காத்திருக்கின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Read more Photos on
click me!

Recommended Stories