GP muthu : தனது சோகத்தை சொல்ல ஆளில்லாமல் தவிக்கும் ஜிபி முத்து...கிண்டலடிக்கும் ரசிகர்கள்

First Published | Nov 1, 2022, 12:28 PM IST

அருகில் இருந்த அவர் நண்பரும் தெறித்து ஓடுகிறார் இந்த கலகலப்பான வீடியோவிற்கு பலரும் கிண்டல் கமெண்ட் செய்து வருகின்றனர்.

டிக் டாக், யூடியூப் மூலம் பிரபலமடைந்த ஜீ பி முத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 - ல் முதல் போட்டியாளராக தேர்வாகி அசத்தியிருந்தார். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டியிடுவதற்கு விண்ணப்பத்தி இருந்த நிலையில் முதல் ஆளாக ஜிபி முத்து தேர்ந்தெடுக்கப்பட்டது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியிருந்தது. 

GP Muthu

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மரக்கடை ஓனரான ஜி பி முத்து டிக் டாக் மூலம் தான் பிரபலம் அடைந்தார். தனது ஊர் சிலாங்கில் பலரையும் வசைப்பாடி பிரபலமானவர். இதற்காக பலரும் இவரை கடுமையாக சாடியும் இருந்தனர்.

Tap to resize

ஆனால் அத்தனை விமர்சனங்களையும் பிக் பாஸ் சீசன் 6 -ல் உடைத்தெறிந்தார் ஜி பி முத்து. தனது வெகுளியான நடவடிக்கையாளும் கடுமையான உழைப்பாலும் அனைத்து வகை ரசிகர்களையும் கவர்ந்ததோழுத்து விட்டார்.

இதனால் இந்த சீசனின் வெற்றியாளர் ஜி பி முத்து தான் என்று முடிவே ஆகிவிட்டது. இவர் குறித்த ஆர்மியும் உருவாகி ஜி பி முத்துவை சப்போர்ட் செய்து வந்தனர். எந்த நாமினேஷனிலும் சிக்காமல் இருந்தால் ஜிபி முத்து தனது மகன் ஞாபகம் வந்ததாக கூறி பிக் பாஸ் வீட்டில் சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தார்.

கமல் உட்பட பலரும் அட்வைஸ் கொடுத்தும் அவர் அதைக் கேட்பதாக இல்லை தனது குடும்பம் மற்றும் மகனை கட்டாயம் பார்த்தே ஆகவேண்டும் என அடம்பிடித்து, ஷோவில் இருந்து விலகிவிட்டார். கமலுக்கும் ஜி பி முத்து மிகவும் பிடித்த நபர் ஆகவே இருந்தார்.

ஆனால் இவர் விலகியது ரசிகர்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது. அதோடு இருபதாயிரம் பேரில் ஒருவருக்கு ஜிபி முத்துவால் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்தும் விமர்சனங்கள் எழுதுன. இந்நிலைகள் வீட்டிற்கு சென்ற ஜிபி முத்து தனது நான்கு பிள்ளைகளுக்கும் பிரியாணி வாங்கி கொடுத்த வீடியோ, தீபாவளி கொண்டாடும் வீடியோ உள்ளிட்டவற்றை பதிவு செய்திருந்தார்.

gp muthu

அதோடு தான் மிகுந்த சோகத்தில் இருப்பதாகவும் தனது சோகத்தை கேட்க ஆளே இல்லை என்றும் ஒரு வீடியோவை பதிவிட்டார். அந்த வீடியோவில் மனைவி அருகில் அமர்ந்திருக்கும் ஜிஎபி முத்து. தனது மனதில் எவ்வளவு சோகம் இருக்கிறது தெரியுமா? எனக் கூற, கடுப்பாகும் அவரது மனைவி நாங்களா பிக் பாஸில் இருந்து வர சொன்னோம்? நீங்கள் தானே கேட்காமல் வந்தீர்கள் வந்துவிட்டு இப்படி சொல்லலாமா என கோவிக்கிறார். அதோடு அருகில் இருந்த அவர் நண்பரும் தெறித்து ஓடுகிறார் இந்த கலகலப்பான வீடியோவிற்கு பலரும் கிண்டல் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Latest Videos

click me!