ரிவர் மொபிலிட்டி நிறுவனம் அதன் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டிசம்பர் 31 வரை சிறப்பு தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் ரூ.14,999 குறைந்த முன்பணத்திலும், ரூ.22,500 வரையிலான தள்ளுபடியிலும் ஸ்கூட்டரை வாங்கலாம்.
புதிய ஆண்டை முன்னிட்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமிடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ரிவர் மொபிலிட்டி நிறுவனம், டிசம்பர் 2025 மாதத்திற்கான அதிரடி தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகையின் மூலம், அதன் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த ஆரம்பத் தொகையுடன் வாங்க முடியும். இந்த சிறப்பு திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக ரூ.22,500 வரை தள்ளுபடியைப் பெறலாம்.
24
ரிவர் இண்டி ஸ்கூட்டர்
குறிப்பாக, ரூ.14,999 என்ற குறைந்த முன்பணம் செலுத்தினாலே ஸ்கூட்டரை வீட்டுக்கு கொண்டு செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் அனைத்தும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. வாகனம் வாங்கும் போது ஏற்படும் நிதிச் சுமையை குறைப்பதற்காக, ரிவர் நிறுவனம் சிறப்பு நிதி வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
34
கேஷ்பேக் சலுகை
இதற்காக ‘Evfin’ மற்றும் ‘IDFC’ போன்ற முன்னணி நிதி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் அதிக தொகையை ஒரே நேரத்தில் செலுத்தாமல், எளிதாக ஸ்கூட்டரை வாங்க முடியும். இதற்கு மேலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களுக்கு கூடுதல் கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. பெங்களூரு, சென்னை, டெல்லி மற்றும் புனே நகரங்களில் உள்ள நிறுவனத்தின் சொந்த ஷோரூம்களில் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.7,500 வரை கேஷ்பேக் பெறலாம்.
இந்த சலுகை HDFC, Kotak, Axis, Bank of Baroda மற்றும் One Card போன்ற வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு பொருந்தும். மேலும், சுமார் ரூ.14,000 மதிப்புள்ள ஆக்சஸரீஸ்களை EMI முறையில் வாங்கும் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த வசதி நாடு முழுவதும் கிடைப்பதால், அதிக செலவு இன்றி ஸ்கூட்டரை தனிப்பயனாக்கும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு உருவாகியுள்ளது.