ஏதர் எனர்ஜி, ரிஸ்டா மாடலின் வெற்றிக்குப் பிறகு, EL01 என்ற கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய, குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த ஸ்கூட்டர் மலிவான விலையில் அறிமுகமாகலாம்.
இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. குறுகிய காலத்திலேயே பல நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. இந்தப் போட்டியில் முக்கியமான இடத்தை பிடித்துள்ள ஏதர் எனர்ஜி, தற்போது குறைந்த விலையில் ஒரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கொண்டு வரத் திட்டமிட்டு வருகிறது. ஓலா போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு நேரடியாக சவாலாக அமையக்கூடிய இந்த ஸ்கூட்டருக்கான வடிவமைப்பு காப்புரிமையை (Design Patent) Ather இந்தியாவில் பதிவு செய்துள்ளது. இந்த மாடல், EL01 கான்செப்டை நிறுவனம் கொண்டதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. Ather-க்கு 450 சீரீஸ் ஸ்கூட்டர்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற பிறகு, குடும்ப பயன்பாட்டுக்கான ரிஸ்டா மாடலை நிறுவனம் அறிமுகம் செய்யப்பட்டது.
23
குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
அறிமுகமான குறுகிய காலத்திலேயே ரிஸ்டா, இந்தியாவின் அதிகம் விற்பனையான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றாக மாறியது. இதன் மூலம் Ather தனது மார்க்கெட் ஷேரை உயர்த்தியது. தற்போது, அதே வெற்றியை இன்னும் குறைந்த விலை மாடல் மூலம் தொடர Ather முயற்சி செய்து வருகிறது. இந்த புதிய ஸ்கூட்டர், ரிஸ்டா-வை விட மலிவான விலையில் வரக்கூடும் என்பதால், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. EL01 கான்செப்ட் ஸ்கூட்டரை Ather, 2025-ல் நடைபெற்ற Ather Community Day நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது புதிய EL பிளாட்ஃபாரமும் வெளியிடப்பட்டது. இந்த பிளாட்ஃபாரத்தை பள்ளி முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக EL01 மாடல் வரக்கூடும்.
33
ஏதர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாத நிலையில், இந்த ஸ்கூட்டர் 2026-ல் சந்தையில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடிவமைப்பில், Ather EL01 ஸ்கூட்டர் ரிஸ்டா-வை நினைவூட்டும் தோற்றத்துடன் இருக்கும். LED ஹெட்லெம்ப், முன்புறத்தில் மெல்லிய LED DRL, எளிமையான பாடி பேனல்கள், ஒற்றை இருக்கை, பில்லியன் பேக்ரெஸ்ட், முன்புற ஏப்ரனில் இணைக்கப்பட்ட இன்டிகேட்டர்கள் போன்ற அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. தரையில் பொருத்தப்படும் பேட்டரி அமைப்புடன், 2 kWh முதல் 5 kWh வரை பல பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். ஒரே சார்ஜில் சுமார் 150 கிமீ வரை ரேஞ்ச் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது Ather-க்கு புதிய வாடிக்கையாளர் வட்டத்தை திறக்கும் முக்கிய மாடலாக மாறலாம்.