பெட்ரோல் மூலம் ஏற்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் கருவியை அனைத்து பெட்ரோல் பங்குளிலும் சில்லறை விநியோக மையங்களிலும் பொருத்தாத வேண்டும். இந்தக் கருவி இல்லாவிட்டால் பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படும். இந்தக் கருவியை பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டது ஏன்? இதன் முக்கியத்துவம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
இந்தியாவில் மாசுபாட்டைக் குறைக்க மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. பெருமளவு மாசுபாடு பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருள்கள் மூலம் ஏற்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் பல்வேறு விதிகளை அறிவித்துள்ளன.
26
Fuel pollution
வாகனங்களில் இருந்து கார்பன் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு விதிமுறைகள் உள்ளன. அதேபோல பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களை பெட்ரோல் பங்குகளில் சேமித்து வைத்திருப்பதன் மூலமாகவும் மாசு ஏற்படும். இந்த மாசுபாட்டைக் கட்டுப்படுத்த வேப்பர் ரெக்கவரி சிஸ்டம் என்ற கருவி ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
36
Petrol Diesel Pollution
சரி, வேப்பர் ரெக்கவரி சிஸ்டம் என்றால் என்ன? பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளை பெட்ரோல் பங்குகள் பூமிக்கு அடியில் பெரிய டேங்குகளில் நிரப்பி சேமித்து வைத்திருக்கும். அதிலிருந்து தான் பெட்ரோல் பங்குக்கு வரும் வாகனங்களுக்கு பெட்ரோல் சில்லறை விநியோகம் செய்யப்படுகிறது.
46
Safety in petrol pumps
பூமிக்கு அடியில் டேங்கில் இருக்கும் எரிபொருள் வெப்பத்தால் மெல்ல மெல்ல காற்றில் கலக்கும். இதனால் பெட்ரோல் பங்கு உள்ள இடத்தில் உள்ள காற்று எளிதாக தீ பற்றிக்கூடியதாக மாறிவிடும். இதைத் தடுக்க பெட்ரோல் பங்குகளில் ஒரு கருவியைப் பொருத்த வேண்டும்.
56
Petrol pumps rules
இந்தக் கருவி வெளியில் உள்ள பெட்ரோல் கலந்த காற்றை உள்ளிழுத்து, உள்ளே ஏற்கனவே காற்றில் கலக்கும் நிலையில் இருக்கும் பெட்ரோலுடன் சேர்த்துவிடும். அதுமட்டுமின்றி வாயு வடிவில் உள்ள பெட்ரோலை மீண்டும் திரவமாக்கி டேங்கில் உள்ள பெட்ரோலுடன் கலக்கும். இதனால் காற்று மாசு தடுக்கப்படுவதுடன் பெட்ரோல் வீணாவதையும் தவிர்க்க முடியும்.
66
Petrol pumps in India
முக்கியத்துவம் வாய்ந்த இந்த வேப்பர் ரெகவரி சிஸ்டம் என்ற கருவியை பெட்ரோல் பங்குகளில் கட்டாயம் பொருத்த வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விதிமுறை வகுத்துள்ளது. ஆனால், ஆகஸ்ட் 2023இல் வெளியான மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையில், நாட்டில் வெறும் 8 சதவீதம் பெட்ரோல் பங்குகளில் மட்டுமே இந்த வேப்பர் ரெகவரி சிஸ்டம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.