Ola Bharat EV Fest
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஓலா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு Bharat EV Fest என்ற பெயரில் சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. நீடிக்கப்பட்ட வாரண்டி, ரெபரல் போனஸ் என்று பல கவர்ச்சிகரமான சலுகைகளை அளிக்கிறது.
Ola EV warranty extension offer
ஓலா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஐந்து ஆண்டு நீட்டிக்கப்பட்ட வாரண்டியை பெற 50 சதவீதம் தள்ளுபடி கொடுக்கிறது. மேலும் புதிய Ola S1 Pro இரண்டாம் தலைமுறை எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்ட் டிரைவ் செய்த வாடிக்கையாளர்களில் ஒருவருக்கு Ola S1 X+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பரிசாக வழங்க உள்ளது.
Ola EV referral bonus
ஏற்கெனவே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கியவர்கள் தனக்கு தெரிந்தவர்களுக்கு ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க பரிந்துரை செய்தால் ரூ.2000 போனஸ் தொகை வழங்கும். ஒவ்வொரு பரிந்துரைக்கும் ரூ.2000 கிடைக்கும்.
Ola EV EMI offer
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் அளிக்கப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் மூலம் ரூ.10,000 விலையைக் குறைக்கலாம். குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் தவணை (EMI) முறையில் வாங்கினால் ரூ.7500 தள்ளுபடி கிடைக்கும்.
Ola Electric Scooter
வாடகை கார் நிறுவனமாக செயல்பட்டு வந்த ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையைத் தொடங்கி, இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனச் சந்தையில் முன்னணி பிராண்டாக உருவெடுத்துள்ளது. இதுவரை 5 மாடல்களில் எலெக்டரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.
Ola EV Fest
இரண்டாம் தலைமுறை Ola S1 Pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓலா நிறுவனத்தின் விலை உயர்ந்த டாப் மாடலாக இருக்கிறது. Ola S1 Air பட்ஜெட் ரேஞ்ச் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரிசையில் இடம்பிடிக்கிறது. Ola S1 X மாடல் தான் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக உள்ளது. இவை தவிர, Ola X1, Ola X1+ ஆகிய மாடல்களும் விற்பனையில் உள்ளன.