Car parking tips
முதல் முறையாக கார் வாங்கியவர்கள் சந்திக்கும் முக்கியாமன பிரச்சினை பார்க் செய்வது பற்றிதான் இருக்கும். பைக்குகளைப் போல இல்லாமல், கார்களை சரியாக பார்க் செய்யாவிட்டால் திரும்ப காருடன் வெளியே வருவதற்குள் பெரிய அளவில் திண்டாட வேண்டிய நிலை ஏற்படும்.
முன்யோசனையுடன் திட்டமிட்டு பார்க் செய்தால் பார்க்கிங்கில் காரை வெளியே எடுத்து வருவது பிரச்சினையாக இருக்காது. இதற்கு இப்போது உள்ள பார்க்கிங் வகைகளைப் பற்றியும் ஒவ்வொன்றிலும் உள்ள சாதக பாதகமான அம்சங்கள் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
Car parking tricks
ஒரு காருக்கு பின்னால் மற்றொரு கார் என வரிசையாக கார்கள் நிறுத்தப்படுவதற்கு பேரலல் பார்க்கிங் (Parallel Parking) என்று பெயர். இந்த பார்க்கிங்கில் காரை நிறுத்தினால், காரை வெளியே எடுக்கும்போது மற்ற கார்கள் மீது இடித்துவிடாமல் ஜாக்கிரதையாக வெளியே வர சிரமப்பட வேண்டுடியிருக்கும். திறமையான டிரைவர்களுக்குதான் இது ஈஸியாக இருக்கும்.
ஒரு காரின் பக்கவாட்டில் இன்னொரு கார் என அடுத்தடுத்த கார்கள் நிறுத்தப்படுவது பெர்பெண்டிக்குலர் பார்க்கிங். பெரும்பாலான இடங்களில் வாகனங்களை நிறுத்தும் இடம் பெர்பெண்டிக்குலர் பார்க்கிங் வகையில் தான் இருக்கும். இந்த முறையில் கார்களை எளிதாக பார்க் செய்யவும் திரும்ப வெளியே எடுக்கவும் முடியும்.
Car parking ideas
ஏறத்தாழ பெர்பெண்டிகுலர் பார்க்கிங் போன்றது தான் ஆங்கிள் பார்க்கிங். காரை நிறுத்தும்போதே கொஞ்ம் சாய்வாக நிறுத்த வேண்டும். இப்படிச் செய்வதால் அதிகமான கார்களை நிறுத்த முடிவது மட்டுமின்றி கார்களை வெளியே எடுப்பதும் சுலபமாக இருக்கும்.
கார்களை அடுத்தடுத்து நிறுத்தாமல் ஒரு காரின் முன் பக்கமும் பின்பக்கமும் ஒரு காரை சாய்வாக நிறுத்துவது டயகனல் பார்க்கிங். இப்படி நிறுத்தினால் இரண்டு கார்களின் கதவையும் திறந்து வெளியே வர வசதியாக இருக்கும். விசாலமான பரப்பில் பார்க்கிங் ஏரியா இருந்தால் இந்த முறை பின்பற்றப்படும்.
Car parking guidelines
மற்ற கார்கள் செல்வதற்கான பாதையை நோக்கி காரின் பின்பகுதி இருக்கும் வகையில் பார்க் செய்வது ஹெட்-இன் பார்க்கிங். இந்த முறையில் காரை பார்க் செய்வது ஈஸியாக இருக்கும். காரை திரும்ப எடுக்கும்போது மற்ற வாகனங்களின் நிலையைப் பார்த்துக்கொண்டு அதற்கு ஏற்ப பத்திரமாக வெளியேற வசதியாக இருக்கும்.
ஹெட்-இன் பார்க்கிங் முறையின் தலைகீழான முறை தான் பேக் இன் பார்க்கிங். அதாவது மற்ற கார்கள் செல்வதற்கான பாதையை நோக்கி காரின் முன்பகுதி இருக்கும் வகையில் பார்க் செய்ய வேண்டும். இதுனால் கார்களை வெளியே எடுப்பது சுலபமாக இருக்கும். ஆனால், காரை உள்ளே நிறுத்தும்போது கொஞ்சம் கவனமாக ரிவர்ஸ் எடுக்க வேண்டும்.
Car parking methods
ஆங்கிள்-இன் பார்க்கிங் முறையில் காரின் முன்பகுதி பார்க்கிங்கின் ஸ்லாட்டில் இருந்து ரிவர்ஸ் எடுத்து வெளியேறும் வகையில் இருக்க வேண்டும். ஆங்கிள்-இன் பார்க்கிங் முறையில் பார்க்கிங் செய்தால் காரை பத்திரமாகவும் விரைவாகவும் வெளியில் எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும்.
காரை சரியான இடத்தில் சரியான விதத்தில் நிறுத்தவதில் இத்தனை விதமான வழிமுறைகள் உள்ளன. இவற்றில் எந்த பார்க்கிங் முறை வசதியான, எதில் வாகனத்தை நிறுத்துவதும் வெளியே எடுப்பதும் எளிமையாக இருக்கும் என்பதை யோசித்து பார்த்து பார்க் செய்வது நல்லது. பாக்கிங் ஏரியாவின் இடவசதி அந்தப் பகுதியில் உள்ள போக்குவரத்து வசதிகளைப் பொறுத்தும் மாறுபடும். எனவே எந்த இடத்திற்கு எந்த பார்க்கிங் டெக்னிக் சரியாக இருக்கும் என்று தெரிந்துகொண்டால் பிரச்சினை இல்லாமல் காரை நிறுத்தவும் வெளியே எடுக்கவும் முடியும்.