இன்டிகாவை அடிச்சுத் தூக்கும் டாடா ஹாரியர் 2023! வெறும் 25 ஆயிரத்தில் புக்கிங் செய்யலாம்!

Published : Oct 18, 2023, 04:18 PM IST

புதிய டாடா ஹாரியர் காரின் ஆரம்ப விலை ரூ.15.49 லட்சம். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் ஆரம்ப விலை ரூ.19.99 லட்சம். 

PREV
13
இன்டிகாவை அடிச்சுத் தூக்கும் டாடா ஹாரியர் 2023! வெறும் 25 ஆயிரத்தில் புக்கிங் செய்யலாம்!
2023 Tata Harrier Facelift

இந்தியாவில் எப்போது வெளியாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் (Tata Harrier Facelift) வெர்ஷன் தற்போது அதிகாரப்பூர்வ முன்பதிவு தொடங்கிவிட்டது. ரூ.25 ஆயிரத்துக்கும் குறைவான தொகையில் இந்தக் காரை முன்பதிவு செய்யும் வசதியையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட புதிய டாடா ஹாரியர் காரின் ஆரம்ப விலை ரூ.15.49 லட்சம். ஸ்மார்ட், ப்யூர், ப்யூர் பிளஸ், அட்வென்சர், அட்வென்சர் பிளஸ், ஃபியர்லெஸ் மற்றும் ஃபியர்லெஸ் பிளஸ் என்ற 7 விதமான வேரியண்டகளில் கிடைக்கும்.

23
Tata Harrier Facelift price in India

ப்யூர் பிளஸ், அட்வென்சர் பிளஸ், ஃபியர்லெஸ் மற்றும் ஃபியர்லெஸ் பிளஸ் ஆகிய நான்கு மாடல்களில் மட்டும்தான் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் ஆரம்ப விலை ரூ.19.99 லட்சம். ஆட்டோமேட்டிக் கியர்பாஸ் உள்ள மாடல்கிளல் டார்க் மோட் வசதியும் இருப்பது கூடுதல் சிறப்பு.

கான்செப்ட் காரைப் போலவே ஹாரியர் ஃபேஸ்லிப்ட் காரை டாடா மோட்டார்ஸ் வடிவமைத்துள்ளது. முன் மற்றும் பின் பகுதிகள் குறிப்பிடத்தக்க அளவு ஹெவியாக மாற்றப்பட்டுள்ளன. பக்கவாட்டு பகுதியில் சிறிய மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளது. 17,18 மற்றும் 19 இஞ்ச் அலாய் வீல் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

33
Tata Harrier Facelift launch date

காருக்கு உள்ளேயும் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகியவையும் உள்ளன. காற்றோட்டமான இருக்கை அமைப்பு கொண்டிருக்கிறது.

டர்ன்-பை-டர்ன் (Turn by Turn) நேவிகேஷன், வாய்ஸ் அசிஸ்டன்ஸ் போன்ற வசதிகளும் புதிய டாடா ஹாரியரில் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் காரில் உள்ள 2.0 லிட்டர் 4 சிலிண்டர் கைரோடெக் டீசல் மோட்டார் எஞ்சின் சிறந்த மைலேஜ் கிடைப்பதை உறுதி செய்கிறது. செயல்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

click me!

Recommended Stories