டெஸ்லாவுக்கு டஃப் கொடுக்கும் பெராரி! கார் விற்பனையில் கிரிப்டோ கரன்சியை வாங்க முடிவு!

First Published | Oct 16, 2023, 11:06 AM IST

அமெரிக்காவில் பெராரி நிறுவனத்தின் கார்களை கிரிப்டோகரன்சியைச் செலுத்தி வாங்கலாம். இந்த வசதி ஐரோப்பிய நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

Ferrari to accept crypto

பெராரி அமெரிக்காவில் அதன் சொகுசு ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு கிரிப்டோகரன்சியில் பணம் செலுத்துவதை ஏற்கத் தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பொறுத்து ஐரோப்பாவிற்கும் இதனை விரிவுபடுத்த இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Ferrari car payment option

பெராரி நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் மற்றும் வணிக அதிகாரி என்ரிகோ கல்லிரா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதைப்பற்றித் தெரிவித்துள்ளார். மின்சார கார் தயாரிப்பாளரான டெஸ்லா, 2021ஆம் ஆண்டில் பிட்காயினில் பணம் செலுத்துவதை ஏற்கத் தொடங்கியதை அடுத்து பெராரியின் இந்த முடிவு வெளியாகியுள்ளது.

Latest Videos


Ferrari to accept cryptocurrency

இந்த ஆண்டின் முதல் பாதியில் அமெரிக்க பிராந்திய நாடுகளுக்கு 1,800 கார்களை ஃபெராரி அனுப்பியுள்ளது. இந்நிலையில் கிரிப்டோ பேமெண்ட்க்கு ஒப்புதல் தெரிவித்துள்ள ஃபெராரி, எத்தனை கார்களை கிரிப்டோ கரன்சி மூலம் விற்பனை செய்யும் என்று கூறவில்லை. அமெரிக்காவில் மட்டும் இந்த பேமெண்ட் வசதி அறிமுகமானாலும் இதை பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த திட்டம் வைத்திருப்பதாகத் தெரிகிறது.

Ferrari cars in the US

இத்தாலிய நிறுவனம், 2022ஆம் ஆண்டில் 13,200 கார்களை விற்பனை செய்துள்ளது. ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் ஃபெராரியின் மிகப்பெரிய பிராந்தியமாகும். இந்த ஆண்டின் முதல் பாதியில் அதன் மொத்த கார் ஏற்றுமதி 46 சதவீதம் இந்த நாடுகளில் நடக்கிறது.

Ferrari cars

பிட்காயின் மற்றும் பிற கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு ஏற்ற இறக்கம் மிகுந்ததாக இருப்பதால் வணிகத்திற்கு மாறானதாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான நிறுவனங்கள் கிரிப்டோவிலிருந்து விலகிவிட்டன. திட்டவட்டமான கட்டுப்பாடுகள் காரணமாக கிரிப்டோவை பணம் செலுத்துவதற்கான வழிமுறையாக ஏற்பதற்குத் தடையாகக் கூறப்படுகிறது.

click me!