ரூ.50 ஆயிரத்துக்குள் ஸ்கூட்டர் வாங்கணுமா? டிவிஎஸ் முதல் டெக்கோ வரை பெஸ்டு எது?

First Published | Oct 11, 2023, 4:12 PM IST

இந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் ஸ்கூட்டர் வாங்க விரும்புகிறவர்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. அந்த வகையில் இந்தத் தொகுப்பில் ரூ.50,000 பட்ஜெட்டில் சிறந்த ஸ்கூட்டர்கள் எவை என்பதைப் பார்க்கலாம்.

Best scooters under Rs 50,000

ரூ.50,000 க்கு குறைவான  பட்ஜெட்டில் சில சிறந்த ஸ்கூட்டர்கள் இருக்கின்றன. விலை மட்டுமின்றி எரிபொருள் சிக்கனத்திலும் சிறந்து விளங்கக்கூடிய ஸ்கூட்டர்களை இந்த பட்ஜெட்டிற்குள் வாங்க முடியும். இவற்றின் பராமரிப்பு செலவுகளும் குறைவாகவே இருக்கும்.

Komaki XGT KM

டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த ஸ்கூட்டர் ஆறு வகைகளைக் கொண்டது. ஆகும், இது ₹46,671 முதல் ₹57,790 வரையிலான விலையில் பதினைந்து வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. 99CC BS6 இன்ஜின் பொருத்தப்பட்ட இந்த ஸ்கூட்டர் முன் மற்றும் பின்புறம் டிரம் பிரேக்குகளைக் கொண்டுள்ளது. ஸ்கூட்டரின் எடை 89 கிலோ. 4 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு கொண்டது. USB சார்ஜிங் வசதியும் உள்ளது.

Tap to resize

Komaki XGT KM

கோமாகி XGT KM என்பது அன்றாடப் பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சாதாரண மின்சார ஸ்கூட்டர். ஸ்கூட்டரில் இருக்கைக்கு அடியில் சேமிப்பு பெட்டி உள்ளது. அதில் தான் பேட்டரி உள்ளது. \முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால், XGT KM ஆனது 130-150 கிமீ தூரத்தை கடக்கும் மற்றும் பேட்டரியை சார்ஜ் செய்ய 6-8 மணிநேரம் ஆகும்.

Avon E Lite

அவான் ஈ லைட் ஸ்கூட்டர் இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் மின்சார பைக்குகளில் ஒன்றாகும். இதை வெறும் 28,000 விலைக்கு வாங்கலாம். முழு சார்ஜ் செய்த பிறகு, 50 கிமீ வரை பயணிக்க முடியும். பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்ய 4-8 மணிநேரம் தேவைப்படுகிறது.

Lohia OMA Star

லோஹியா ஓஎம்ஏ ஸ்டார் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. கிளட்ச் இல்லாத ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், நீண்ட இருக்கை, ஸ்டோரேஜ் பாக்ஸ் ஆகியவை உள்ளன. முழுமையாக சார்ஜ் செய்த பிறகு 60 கிமீ வரை செல்லும். இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.41,444 முதல் கிடைக்கிறது.

Techo Electra Neo

டெக்கோ எலக்ட்ரா நியோ இந்தியாவில் ₹41,919 விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர். நான்கு வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரில் முன் மற்றும் பின்புறம் டிரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.  முழு சார்ஜ் செய்ய ஏறக்குறைய 5-7 மணிநேரம் எடுக்கும். 60-65 கிமீ வரை வழங்கலாம்.

Latest Videos

click me!