ஓலா முதல் பஜாஜ் வரை... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க எக்கச்செக்க சாய்ஸ் இருக்கு! எது பெஸ்டு?

First Published | Oct 9, 2023, 11:32 AM IST

பண்டிகைக் காலம் வந்துவிட்டது, இந்த தீபாவளிக்கு நீங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க விரும்பினால், உங்களுக்காக பல சாய்ஸ் இருக்கின்றன.

Electric scooter under 2 lakh

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் ரூ.2 லட்சத்திற்குள் வாங்கக்கூடிய சில சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பற்றி இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

Ola S1 Pro Gen 2

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணியில் இருக்கிறது. Ola S1 Pro Gen 2 ஸ்கூட்டர் சமீபத்தில் வெளியானது. இந்த பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1,47,499 விலையில் கிடைக்கிறது. புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்புடன் 4kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 195 கிமீ வரை செல்லும். மணிக்கு 120 கிமீ வேகத்தை வழங்குகிறது. 7 இன்ச் டச் ஸ்கிரீனும் உள்ளது.

Tap to resize

TVS iQube S

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் TVS iQube S ரூ.1,38,883 விலையில் கிடைக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.04kWh பேட்டரி உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை செல்லக்கூடியது. மணிக்கு 78 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.

Ather 450X

ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் Ather 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றொரு சிறந்த தேர்வாக இருக்கும். இதன் விலை ரூ.1,59,086. இதில் உள்ள 3.7kWh பேட்டரி, ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை தாக்குப்பிடிக்கும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் செல்லும்.

Vida V1 Pro

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க விரும்புகிறவர்களுக்கு ஹீரோ நிறுவனத்தின் Vida V1 Pro ஸ்கூட்டரின் வடிவமைப்பு கவர்ச்சிகரமானதாக இருக்கும். இதன் விலை ரூ.1,25,900. இந்த மின்சார ஸ்கூட்டர் 3.94kWh பேட்டரியுடன் ஒரே சார்ஜில் 110 கிமீ வரை தாங்கக்கூடியது. இதில் மணிக்கு 80 கிமீ வேகம் வரை பயணிக்கலாம்.

Bajaj Chetak

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேடக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நேர்த்தியான வடிவமைப்புடன் ரூ.1,20,000 விலையில் விற்கப்படுகிறது. இதில் உள்ள 2.9kWh பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 108 கிமீ வரை பயணிக்க முடியும். மணிக்கு 63 கிமீ வேகம் வரை செல்லலாம்.

Simple One

சிம்பிள் எனெர்ஜி நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் Simple Energy ரூ.1,45,000 விலையில் விற்பனைக்கு உள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டர் 5 kWh பேட்டரி கொண்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 212 கிமீ வரை நீடித்து உழைக்கக்கூடியது. மணிக்கு 105 கிமீ வேகத்தில் பயணிக்கும் ஆற்றலும் இருக்கிறது.

Latest Videos

click me!