ஒரு லட்சத்துக்குள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கணுமா? 100 கி.மீ. ரேஞ்சில் டாப் 5 ஸ்கூட்டி லிஸ்ட் இதோ!

First Published | Sep 27, 2023, 2:53 PM IST

ஒரு லட்சம் ரூபாய்க்குள் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் நபர்க்களுக்கு இப்போது நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கிறது. டிவிஎஸ், ஓலா, ஹீரோ, ஒகினாவா, ஆம்பியர் என பல நிறுவனங்கள் குறைந்த விலையில் மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டியை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை பயணிக்கும் டாப் 5 மின்சார ஸ்கூட்டர்களை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

Ola S1 Air 3kWh

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.99,999 விலையில் 125 கிமீ ரேஞ்ச் வழங்குகிறது. 7-இன்ச் டச் ஸ்கிரீன், 34L பூட் ஸ்பேஸ், LTE / Wifi இணைப்பு GPS, 10W ஸ்பீக்கர்கள் மற்றும் பல அம்சங்களும் உள்ளன.

Ampere Magnus EX

ஆம்பியர் மேக்னஸ் EX முழு ரீசார்ஜ் செய்தால் 121 கிமீ ரேஞ்ச் கொடுக்கும். இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கிமீ. முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 4-5 மணிநேரம் ஆகும். விலை ரூ.81,900.

Latest Videos


TVS iQube

மிகவும் நம்பிக்கைக்குரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்று டிவிஎஸ் நிறுவனத்தின் iQube. இதின் விலை சரியாக ரூ. 1 லட்சம். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணிக்கலாம். 7-இன்ச் டிஜிட்டல் திரை, LED விளக்குகள் என பல அம்சங்களைக் கொண்டுள்ளது.

Okinawa Dual 100

சந்தையில் ஒகினாவா டூயல் 100 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அதிக தேவை உள்ளது. இதன் விலை ரூ.79,813 எனக் குறைவாக இருப்பது மட்டுமின்றி, முழு சார்ஜ் செய்தால் 149 கிமீ பயணிக்க முடியும் என்று ஒகினாவா நிறுவனம் சொல்கிறது.

Hero Electric Optima CX – Dual Battery

ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா சிஎக்ஸ் டூயல் பேட்டரியுடன் ரூ.85,190 விலையில் கிடைக்கிறது. இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் முன்னணி உள்ள ஒரு மாடல். ஒரே சார்ஜில் 140 கிமீ பயணிக்கலாம் என்று ஹீரோ நிறுவனம் சொல்கிறது. குறைந்தது 100 கிமீ ரேஞ்ச் கிடைக்கும் என்றும் கூறுகிறது.

click me!