இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் பைக்குகளுக்கு என்று தனி இடம் உள்ளது. இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. பைக் வாங்கும் வாடிக்கையாளர்களில் பலரும் முக்கியமாக கவனிக்கும் அம்சங்களில் ஒன்று மைலேஜ். அந்த வகையில், தற்போது சந்தையில் கிடைக்கும் பைக்குகளில் மிக அதிக மைலேஜ் கிடைக்கும் பைக் எது என்பதை இத்தொகுப்பில் காணலாம்.
பஜாஜ் நிறுவனத்தின் பிளாட்டினா தான் இந்தியாவிலேயே மிக அதிக மைலேஜ் தரும் பைக் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த பைக்கின் விலை இப்போது சுமார் 66 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இந்த பைக் 73.5KMPL மைலேஜ் தருகிறது.
25
TVS Sport
மைலேஜ் கிங் பைக்குளில் இரண்டாவது இடத்தில் உள்ளது டிவிஎஸ் ஸ்போர்ட். இந்த பைக்கில் 70 KMPL மைலேஜ் தருகிறது. இதன் விலை சுமார் 70 ஆயிரம் ரூபாய்.
35
TVS Star City Plus
டிவிஎஸ் நிறுவனத்தின் மற்றொரு பைக்கும் டாப் 5 மைலேஜ் பைக்குகளில் இடம்பெறுகிறது. இந்த ஸ்டார் சிட்டி பைக் 68 KMPL மைலேஜ் தருகிறது. விலை சுமார் ரூ.74 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை இருக்கும்.
45
Hero HF Deluxe
ஹீரோ நிறுவனத்தின் மிகக் குறைந்த விலை கொண்ட பைக் இது. ரூ.56 ஆயிரம் முதல் ரூ.68 ஆயிரம் வரை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது 65 KMPL மைலேஜ் அளிக்கிறது.
55
TVS Radeon
இந்த பைக் டிவிஎஸ் நிறுவனத்தின் மற்றொரு நம்பிக்கைக்குரிய மாடல். இது 65 KMPL மைலேஜ் குடுக்கிறது. இதன் விலை 71,688 ஆயிரம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) முதல் தொடங்குகிறது. இதன் விலை ரூ.76 ஆயிரம் முதல் ரூ.81 ஆயிரம் வரை இருக்கும்.