Budget cars 2023: ரூ.5 லட்சத்துக்குள் 5 பட்ஜெட் கார்கள்!

Published : Aug 20, 2023, 09:37 PM IST

புதிதாக கார் வாங்க ஆசைப்படுபவர்களுக்கு பட்ஜெட் ஒரு பிரச்சினையாக இருக்கலாம். குறிப்பாக, நடுத்தர வர்கத்தை சேர்ந்த மக்கள் பட்ஜெட் கார்களையே அதிகம் வாங்க ஆசைப்படுவர். அப்படி வாங்கும் கார்கள் அதிக மைலேஜ் தர வேண்டும், பராமரிப்பு செலவு குறைவாக இருக்க வேண்டும், சிறந்த அம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கும். அப்படி, ரூ.5 லட்சத்திற்குள் விற்பனையாகும் 5 பட்ஜெட் கார்கள் குறித்து இங்கு காணலாம்.

PREV
15
Budget cars 2023: ரூ.5 லட்சத்துக்குள் 5 பட்ஜெட் கார்கள்!

Maruti Alto 800


மாருதி ஆல்டோ 800 நான்கு இருக்கைகள் கொண்ட ஹேட்ச்பேக் கார். இந்திய சந்தையில் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.3.54 லட்சம் முதல் 5.13 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது ஐந்து வகைகள் மற்றும் நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்கள் மாருதி ஆல்டோ 800இல் உள்ளது. ஆல்டோ 800 இன் பெட்ரோல் இன்ஜின் 796சிசி, 47.33 பிஎச்பி பவரையும், 69 என்எம் டார்க் திறனையும் கொண்டுள்ளது. ஆல்டோ 800 இன் 796சிசி சிஎன்ஜி இன்ஜின் 47.33 பிஎச்பி பவரையும், 69 என்எம் டார்க் திறனையும் கொண்டுள்ளது. ஆல்டோ 800 மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும். ஆல்டோ 800 இன் மைலேஜ் பெட்ரோலில் லிட்டருக்கு 22.05 கிமீ வரை கொடுக்கும் என கூறப்படுகிறது. சிஎன்ஜியில் கிலோவுக்கு 31.59 கிமீ மைலேஜ் கொடுக்கும் என கூறப்படுகிறது.

25

Maruti Alto K10


மாருதி ஆல்டோ கே10 நான்கு இருக்கைகள் கொண்ட ஹேட்ச்பேக் கார். இந்திய சந்தையில் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.3.99 லட்சம் முதல் 5.96 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது ஏழு வகைகள் மற்றும் ஏழு வண்ணங்களில் கிடைக்கிறது. மாருதி ஆல்டோ K10 பெட்ரோல் மற்றும் CNG இன்ஜின்களில் கிடைக்கிறது. ஆல்டோ கே10 214 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டுள்ளது. ஆல்டோ கே10 இன் பெட்ரோல் எஞ்சின் 998சிசி, 65.71 பிஎச்பி பவரையும், 89 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. ஆல்டோ கே10 இன் 998சிசி சிஎன்ஜி இன்ஜின் 65.71 பிஎச்பி பவரையும், 89 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. ஆல்டோ கே10 மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆல்டோ கே10 இன் மைலேஜ் பெட்ரோலில் லிட்டருக்கு 24.39 கிமீ வரை வழங்கும் எனவும், சிஎன்ஜியில் கிலோவுக்கு 33.85 கிமீ /கிகி வரை மைலேஜ் கொடுக்கும் என கூறப்படுகிறது.

35

Maruti S-Presso


மாருதி எஸ்-பிரஸ்ஸோ நான்கு இருக்கைகள் கொண்ட ஹேட்ச்பேக் கார். இந்திய சந்தையில் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.4.26 லட்சம் முதல் 6.11 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது எட்டு வகைகள் மற்றும் ஏழு வண்ணங்களில் கிடைக்கிறது. மாருதி S-Presso பெட்ரோல் மற்றும் CNG இன்ஜின்களில் கிடைக்கிறது. S-Presso இன் பெட்ரோல் எஞ்சின் 998cc ஆகும், இது 65.71bhp மற்றும் 89nm டார்க்கை உருவாக்குகிறது. S-Presso இன் 998cc CNG இன்ஜின் 65.71bhp ஆற்றலையும் 89nm டார்க்கையும் வெளிப்படுத்தும். S-Presso மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. எஸ்-பிரஸ்ஸோவின் மைலேஜ் பெட்ரோலில் லிட்டருக்கு 24.12 கிமீ வரையும், சிஎன்ஜியில் கிலோவுக்கு 32.73 கிமீ வரை மைலேஜ் கொடுக்கும் என கூறப்படுகிறது.

45

Maruti Alto 800 tour


மாருதி ஆல்டோ 800 tour ஐந்து இருக்கைகள் கொண்ட ஹேட்ச்பேக் கார். இந்திய சந்தையில் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.4.20 லட்சம். மூன்று வண்ணங்களில் சிங்கிள் வேரியண்ட்டாக கிடைக்கிறது. மாருதி ஆல்டோ 800 tour BS6 பெட்ரோல் எஞ்சினில் மட்டுமே கிடைக்கிறது. 796சிசி கொண்ட இதன் பெட்ரோல் எஞ்சின் 47.33 பிஎச்பி ஆற்றலையும் 69 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது. மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும். மைலேஜ் லிட்டருக்கு 22.05 கிமீ வரை கொடுக்கும் என தெரிகிறது.

55

Renault KWID


Renault KWID ஐந்து இருக்கைகள் கொண்ட ஹேட்ச்பேக் கார். இந்திய சந்தையில் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.4.70 லட்சத்தில் தொடங்குகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் எஞ்சினில் கிடைக்கும் இந்த கார் லிட்டருக்கு 21.46 - 22.3 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கும் என கூறப்படுகிறது. இதன் பவர் 67 BHP மற்றும் டார்க் 91 NM ஆகும். கிரவுண்ட் கிளியரன்ஸ் 184 mm ஆகும்.

click me!

Recommended Stories