ஹைட்ரஜனில் இயங்கும் சுசுகி பர்க்மேன்! ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் அறிமுகம்!

First Published | Oct 5, 2023, 9:10 AM IST

ஹோண்டா நிறுவனம் ஹைட்ரஜினில் ஓடும் புதிய பைக்கை அறிமுகம் செய்ய உள்ளது. ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் அக்டோபர் 28 முதல் நவம்பர் 5 வரை நடைபெற உள்ள மொபிலிட்டி ஷோ நிகழ்ச்சியில் சுசுகியின் புதிய ஹைட்ரஜன் பைக் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

Suzuki Moqba

செப்டம்பர் 2023 இன் இறுதியில், ஹோண்டா தனது சஸ்டைனா-சி எலக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்திய நிலையில் ஹைட்ரஜன் பைக் அடுத்த புதுவரவாக அமைகிறது.

சுசுகி அமெரிக்க சந்தையில் கார் விற்பனையை நிறுத்தியுள்ள நிலையிலும், சுசுகி உலகின் பிற பகுதிகளில் மிகவும் பிரபலமான கார் நிறுவனமாக நீடிக்கிறது. ஜிம்னி முதல் ஸ்விஃப்ட் வரை சுசுகி வாகனங்கள் இல்லாத போக்குவரத்தைப் பார்ப்பது அரிது. இந்நிலையில், 2023 ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் புதிய திட்டங்களுடன் சுசுகி நிறுவனம் களமிறங்குகிறது.

வெறும் ரூ.45 ஆயிரத்தில் ரோல்ஸ் ராய்ஸ் காரை உருவாக்கிய கேரள இளைஞர்! ஆச்சரியத்தில் கார் பிரியர்கள்!

Suzuki e-PO World Premiere

ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் சுசுகி மூன்று பிரீமியர் பைக்குகளை அறிமுகம் செய்ய உள்ளது. முதலாவது சுசுகி e-PO வேல்டு பிரீமியர். பானாசோனிக் நிறுவனத்துடன் உடன் இணைந்து இந்த பைக்கை சுசுகி உருவாக்கி இருக்கிறது. இது ஒரு எலக்ட்ரிக் அசிஸ்ட் சைக்கிள் போல செயல்படும். பெடல்கள் இருந்தாலும், பெடலிங் இல்லாமல் சவாரி செய்ய முடியும்.

Tap to resize

Suzuki e-Choinori World Premiere

சுசுகி மற்றும் பானாசோனிக் இணைந்த உருவாக்கியுள்ள மற்றொரு தயாரிப்பு சுசுகி இ-சோயினோரி வேல்டு பிரீமியர். இது 2000 களின் முற்பகுதியில் சுசுகி வெளியிட்ட 50CC சோயினோரி ஸ்கூட்டர் போல தோன்றும் மின்சார ஸ்கூட்டர். மின்சார உதவியுடன் இயங்கும் சைக்கிளுக்கான மோட்டார் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பட்டைய கிளப்பும் டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிப்ட் மாடல்! 465 கி.மீ. ரேஞ்ச் கொடுக்கும் சூப்பர் எலெக்ட்ரிக் கார்!

Suzuki Hydrogen Burgman World Premiere

சுசுகி தனது முதல் ஹைட்ரஜனில் இயங்கும் இரு சக்கர வாகனத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தக் காத்திருக்கிறது. 2023 ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் சுசுகி நிறுவனம் அதனை வெளியிட்டாலும், இது சோதனையில் உள்ள வாகனம் என்று தான் குறிப்பிடுகிறது. இந்த பைக்கில் ஹைட்ரஜன் எஞ்சினை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதை பெரிய அளவில் உற்பத்தி செய்வது குறித்த திட்டம் ஏதும் இப்போதைக்கு இல்லை என்று தெரிகிறது.

Suzuki e-Burgman

70 மெகாபாஸ்கல் (MPa) ஹைட்ரஜன் டேங்க் மற்றும் அதற்கு ஏற்ற எஞ்சினைக் கொண்ட ஹைட்ரஹன் பைக் பர்க்மேன் 400 ABS போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. ஹைட்ரஜன் பைக் தயாரிப்பின் முன்னேற்றத்தை விளக்கும் வீடியோவையும் சுசுகி நிறுவனம் மொபிலிட்டி ஷோவில் காட்சிப்படுத்த இருக்கிறது.

சுசுகி ஏற்கனவே ஏப்ரல் 2023 இல் e-Burgman ஐப் பயன்படுத்தி சோதனைகளைத் தொடங்கியது. Gachaco இலிருந்து பேட்டரிகளைப் பயன்படுத்துகிறது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சிறந்த 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இதுதான்..!

Latest Videos

click me!