இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சிறந்த 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இதுதான்..!
ஓலா முதல் ஏத்தர் வரையிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்கள் செப்டம்பர் 2023 இல் வரை பெரிய விற்பனையை பெற்ற்றுள்ளது.
Best Electric Scooters
தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் விலை மற்றும் குறைந்த இயக்க செலவுகள் காரணமாக மக்கள் இ-ஸ்கூட்டர்களை வாங்க விரும்புகிறார்கள். கடந்த மாதம் அதாவது செப்டம்பர் 2023 விற்பனையின் அடிப்படையில் டாப்-5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்களைப் பற்றி பார்க்கலாம்.
Ola Electric
இந்த பட்டியலில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்த இரு சக்கர வாகன எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் செப்டம்பர் 2023 இல் மொத்தம் 18,635 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. ஓலா இந்திய சந்தையில் Ola S1 AIR, S1 X மற்றும் S1 Pro போன்ற மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்கிறது.
TVS Motor Company
இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்திருக்கும் நிறுவனம் டிவிஎஸ் மோட்டார் ஆகும். TVS செப்டம்பர் 2023 மாதத்தில் மொத்தம் 15,512 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இந்திய சந்தையில், TVS தற்போது I-Qube மற்றும் TVS X மாடல்களை அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளது.
Ather Energy
ஏதர் எனர்ஜி செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 7,109 யூனிட்களை விற்பனை செய்து இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஏதர் எனர்ஜி தற்போது 45S மற்றும் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
Bajaj Auto
இந்த பட்டியலில் நான்காவதாக இடம் பெற்றிருக்கும் நிறுவனம் பஜாஜ் ஆட்டோ ஆகும், இது செப்டம்பர் 2023 இல் மொத்தம் 7,045 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. பஜாஜின் மின்சார வரிசையில் சேடக் EV மட்டுமே மின்சார ஸ்கூட்டர் ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 3kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 90 கிமீ தூரம் செல்லக்கூடியது.
Ampere Greaves
இந்த பட்டியலில் ஐந்தாவது மற்றும் கடைசி இடம் பிடித்துள்ளது ஆம்பியர் க்ரீவ்ஸ் ஆகும். செப்டம்பர் 2023 இல் மொத்தம் 3,605 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.