சேலுக்கு முன்பே களைகட்டிய கார் விற்பனை! டாப் 10 கார்கள் லிஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் மாருதி சுசுகி!

First Published | Oct 14, 2023, 2:10 PM IST

இந்த ஆண்டின் பண்டிகைக் காலத்துக்கு முன்னதாகவே, செப்டம்பர் மாதம் ஆட்டோமொபைல் துறை விற்பனையில் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள தரவுகளின்படி செப்டம்பரில் 3,63,733 கார்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. இதில் டாப் 10 இடங்களைப் பிடித்த கார்கள் எவை என்று இத்தொகுப்பில் பார்க்கலாம்.

Maruti Suzuki Baleno

செப்டம்பர் 2023 கார்களின் விற்பனையில் முதல் இடம் பிடித்திருப்பது மாருதி சுஸுகி பலேனோ. 18,417 கார்கள் விற்பனை ஆகியிருக்கிறது.

Maruti Suzuki Wagon R

செப்டம்பரில் கார் விற்பனையில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருப்பதும் மாருதி நிறுவனத்தின் வேகன் ஆர் கார்தான். 16,250 கார்கள் விற்பனை ஆகியிருக்கிறது.

Tap to resize

Tata Nexon

டாடா நிறுவனத்தின் நெக்ஸான் செப்டம்பர் மாத கார் விற்பனையில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. 15,235 கார்கள் விற்பனை ஆகியிருக்கிறது.

Maruti Suzuki Brezza

மாருதி சுசுகி பிரெஸ்ஸா செப்டம்பரில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தக் காரை 15,001 வாடிக்கையாளர்கள் வாங்கியுள்ளனர்.

Maruti Suzuki Swift

ஐந்தாவது இடத்தில் மாருதி ஸ்விஃப்ட் உள்ளது. இந்தக் கார் செப்டம்பர் மாதம் 14,703 முறை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Maruti Suzuki Dzire

மாருதி சுஸுகி டிசையர் செப்டம்பர் 2023 இல் 13,880 முறை விற்பனை செய்யப்பட்டு டாப் 10 பட்டியலில் 6வது இடத்தைப் பெற்றுள்ளது.

Maruti Suzuki Ertiga

மாருதி சுசுகி எர்டிகாவுக்கு ஏழாவது இடம் கிடைத்திருக்கிறது. இந்தக் காரை 13,528 பேர் செப்டம்பர் மாதம் வாங்கியுள்ளனர்.

Tata Punch

செப்டம்பர் மாதத்தில் 13,036 டாடா பஞ்ச் கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்தக் கார் எட்டாவது இடத்தில் இருக்கிறது.

Hyundai Creta

ஹூண்டாய் நிறுவனம் செப்டம்பரில் 12,717 க்ரெட்டா கார்களை விற்பனை செய்திருக்கிறது. இந்த கார் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

Hyundai Venue

ஹூண்டாய் வென்யூ  கார் டாப் 10 கார்களில் கடைசியாக உள்ளது. செப்டம்பரில் 12,204 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Latest Videos

click me!