3 செகண்ட்ல 100 கி.மீ. ஸ்பீடு... அலப்பறை கிளப்ப வரும் BMW M 1000 R... முன்பதிவு ஆரம்பம்

Published : Oct 17, 2023, 04:45 PM IST

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிரீமியம் பைக் BMW M 1000 R இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.33 லட்சம் முதல்  ரூ.38 லட்சம் வரை உள்ளது.

PREV
13
3 செகண்ட்ல 100 கி.மீ. ஸ்பீடு... அலப்பறை கிளப்ப வரும் BMW M 1000 R... முன்பதிவு ஆரம்பம்
BMW M 1000 R 2023

பிரீமியம் பைக்குளில் பி.எம்.டபிள்.யூ. நிறுவனத்தின் புதிய BMW M 1000 R  பைக்கும் இடம்பிடிக்க உள்ளது. எதிர்பார்ப்பைக் கிளப்பிய இந்த பைக்கை வாங்குவதற்கான புக்கிங் BMW நிறுவன ஷோவ்ரூம்களில் தொடங்கியுள்ளது. பதிவு செய்பவர்களுக்கு ஜனவரி 2024 முதல் டெலிவரி செய்யப்படும்.

BMW M 1000 R  பைக்கின் Competition வெர்ஷன் M கார்பன் வீல், M ரைடர் பூட் ரெஸ்ட் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டது. பைக்கின் பின்புற வீல் கவர், செயின் கார்டு, முன்பக்க வீல் கவர், டேங்க் கவர், ஏர் பாக்ஸ், ஸ்ப்ராக்கெட் கவர் என அனைத்தும் முழு M கார்பனைக் கொண்டது.

23
BMW M 1000 R in India

இந்த பைக்கில் உள்ள என்ஜின் 999cc திறன் கொண்டது. லைன் 4 சிலிண்டர் என்ஜின் உள்ளது. இதன் பவர் 209 BHP மற்றும் டார்க் 113NM ஆகும். இந்த பைக்கில் அதிகபட்சமாக மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லலாம். வெறும் 3.2 நொடிகளில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை எட்டக்கூடியது.

டூயல் டிஸ்க் பிரேக், டைனமிக் ட்ரெக்சன் கன்ட்ரோல், வீல் கன்ட்ரோல், என்ஜின் பிரேக் கன்ட்ரோல், லான்ச் கன்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

33
BMW M 1000 R Price

Rain, Road, Dynamic, Race மற்றும் Race Pro என ஐந்து விதமான ரைடிங் மோட் (Riding mode) ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. கியர் பாக்ஸில் ரிவர்ஸ் கியர் ஷிப்ட் வசதியும் இருக்கிறது. ஷிப்டு கேம் தொழில்நுட்பத்தையும் பிஎம்டபிள்யூ உள்ளடக்கி இருக்கிறது.

6.5 இன்ச் டச் ஸ்க்ரீன் வசதி, USB போர்ட் சார்ஜிங், LED லைட் ஆகியவற்றையும் கொண்ட BMW M 1000 R பைக்கின் விலை ரூ.33 லட்சம் முதல் ஆரம்பிக்கிறது. BMW M 1000 R  Competition வெர்ஷன் ரூ.38 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

click me!

Recommended Stories