சஃபாரி காரின் புதிய மாடலை களமிறக்கும் டாடா மோட்டார்ஸ்... அட்டகாசமான தோற்றத்தில் புதிய வசதிகள்!

First Published | Oct 23, 2023, 1:35 PM IST

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புகழ்பெற்ற டாடா சஃபாரி காரின் புதிய மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் விலை, சிறப்பு அம்சங்கள், மைலேஜ் போன்ற விவரங்களைப் பார்க்கலாம்.

2023 New Tata Safari SUV

இந்தியாவின் பிரபல கார்களில் ஒன்று டாடா சஃபாரி. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த காரின் புதிய மாடலை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த கார் ரூ.16.19 லட்சம் முதல் ரூ.25.49 லட்சம் விலையில் விற்பனைக்கு உள்ளது.

New Tata Safari Specs

சமீபத்தில் புதிய டாடா ஹாரியர் ஃபேஸ்லிப்ட் காரை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்த புதிய சஃபாரி காரையும் கூடுதல் சிறப்பு அம்சங்களுடன் டாடா மோட்டார்ஸ் களமிறக்க உள்ளது. புதிய சஃபாரி காரில் வெளி வடிவமைப்பு புதுப்பிக்கப்பட்டிருப்பதுடன், உள்ளேயும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், சில மாற்றங்கள் டாடா நெக்ஸான் காரின் புதிய மாடலில் உள்ளதைப் போலவே உள்ளன.

Tap to resize

Tata Safari Red Dark edition

பகலிலும் ஒளிரும் LED விளக்குகள், புதிய கிரில் டிசைன், செவ்வக வடிவ முகப்பு விளக்கு உள்ளது. காரின் புன்புறத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அலாய் வீல், பின்புற ஸ்கிட் பிளேட் ஆகியவையும் மாறியுள்ளன. சஃபாரியின் சின்னம் காரின் ஓரத்தில் பேட்ஜ் பொறிக்கப்பட்டுள்ளது.

New Tata Safari 2023

காரின் உள்ளே 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இருக்கிறது. ஸ்டீரிங் வீலின் வடிவமைப்பும் புதிதாக மாற்றப்பட்டுள்ளது. புதிதாக 4-ஸ்போக் வீலுடன் ஒளிரும் லோகோவும் புதிய சஃபாரியில் சேர்க்கப்பட்டு உள்ளது.10 JBL ஸ்பீக்கருடன் கூடிய ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட ஏசி இருப்பதால் பின் சீட்டில் இருப்பவர்களும் தங்களுக்கு ஏற்ற அளவில் ஏசியை மாற்றிக்கொள்ளலாம். பாதுகாப்பிற்காக 6 ஏர் பேக்குகள் இருக்கின்றன.

Tata Safari on road price

நான்கு சிலிண்டருடன் கூடிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட புதிய சஃபாரி, 170 hp அதிகபட்ச பவரும் 350 Nm இழுவிசையும் கொண்டுள்ளது. கியர் பாக்ஸைப் பொறுத்தவரை, மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் என இரண்டு ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய டாடா சஃபாரி கார் மேனுவல் கியரில் ஒரு லிட்டருக்கு 16.30 கி.மீ. மைலேஜ் தரக்கூடியது என்றும் ஆட்டோமெட்டிக் கியரில் ஒரு லிட்டருக்கு 14.50 கி.மீ. மைலேஜ் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

Latest Videos

click me!