Bike Tyres : டியூப் டயரா, டியூப்லெஸ் டயரா? உங்க பைக்குக்கு எது பெஸ்ட்?

Published : Jul 06, 2026, 09:43 AM IST

Bike Tyres : டியூப் மற்றும் டியூப்லெஸ் டயர்களில் எது சிறந்தது? உங்கள் பைக்கின் பாதுகாப்பு மற்றும் மைலேஜிற்கு ஏற்ற சரியான டயரைத் தேர்ந்தெடுப்பது எப்படி? முழு விவரங்களையும் இந்த கட்டுரையில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
16
ரெண்டு வகை

பைக் ஓட்டும்போது நம்மளோட பாதுகாப்பும், சௌகரியமும் டயர்களைப் பொறுத்துதான் இருக்கு. மார்க்கெட்ல டியூப் டயர், டியூப்லெஸ் டயர்னு ரெண்டு வகை இருக்கு. புதுசா டயர் வாங்கும்போது, நம்ம பைக்குக்கு எது சரிங்கிற குழப்பம் எல்லாருக்கும் வரும். இந்த ரெண்டுக்கும் உள்ள வித்தியாசத்தையும், உங்களுக்கு எது பெஸ்ட்னு இங்க பார்க்கலாம்.

26
அதிர்வுகளை தாங்கும்
இது பல வருஷமா நாம பார்த்துட்டு வர்ற ஒரு பழைய டெக்னாலஜி. இந்த டயருக்குள்ள காத்து நிரப்பப்பட்ட ஒரு ரப்பர் டியூப் இருக்கும். ஸ்போக் வீல் இருக்கிற பைக்குகள்ல இதை ஈஸியா பொருத்தலாம். கரடுமுரடான ரோட்ல போகும்போது, அதிர்வுகளை தாங்குறதுக்கு இது ரொம்ப உதவியா இருக்கும்.
36
பேலன்ஸ்
இதோட மிகப்பெரிய குறைபாடு என்னன்னா, ஆணி குத்தினா உள்ள இருக்குற டியூப் கிழிஞ்சு, காத்து மொத்தமா வெளியேறிடும். நீங்க வேகமா போயிட்டு இருக்கும்போது திடீர்னு காத்து போனா, பைக்கோட பேலன்ஸ் பாதிச்சு விபத்து நடக்க வாய்ப்பு அதிகம்.
46
மாடர்ன் வண்டிகள்
இப்போ வர்ற பெரும்பாலான புது மற்றும் மாடர்ன் பைக்குகள்ல டியூப்லெஸ் டயர்கள்தான் பயன்படுத்துறாங்க. பேர்ல இருக்குற மாதிரியே, இந்த டயர்கள்ல டியூப் இருக்காது. டயர் நேரடியா ரிம் கூட டைட்டா பொருந்தி, காத்து வெளியேறாம தடுக்கும்.
56
பஞ்சர் ஆனாலும்...

இதோட மிகப்பெரிய நன்மை இதுதான்: ரோட்ல ஆணியோ, கூர்மையான பொருளோ குத்தினாலும், காத்து சட்டுனு வெளியேறாது, மெதுவாதான் வெளியேறும். டயர் பஞ்சர் ஆனாலும், நீங்க நிறுத்தாம சில கிலோமீட்டர் வரைக்கும் ஓட்டிட்டு போய் மெக்கானிக் கிட்ட காட்டலாம். பைக்கைத் தள்ளிக்கிட்டு போக வேண்டிய அவசியம் இருக்காது.

Car Tips : கார் கண்ணாடியில உருளைக்கிழங்கை தேய்ச்சா என்ன ஆகும்? இந்த மேஜிக் பின்னாடி ஒரு சயின்ஸ் இருக்கு!

66
டியூப்லெஸ்தான் பெஸ்ட்

பாதுகாப்பு, பெர்ஃபாமன்ஸ், வசதினு பார்த்தா, டியூப்லெஸ் டயர்கள்தான் இப்போதைக்கு சிறந்த ஆப்ஷன். பஞ்சர் ஆனா வண்டியோட பேலன்ஸ் போகாது, அதனால நீங்க பாதுகாப்பா இருக்கலாம். டியூப்லெஸ் டயர் பஞ்சர் ஆனா, வீலை கழட்ட வேண்டிய அவசியமே இல்லை. ஒரு மெக்கானிக் பஞ்சர் கிட் வெச்சு வெறும் 2 நிமிஷத்துல சரி பண்ணிடலாம். டியூப் இல்லாததால இந்த டயர்கள் எடை குறைவா இருக்கும். இதனால இன்ஜின் மேல அழுத்தம் குறைஞ்சு, பைக்கோட மைலேஜ் அதிகமாகும், டயரும் சீக்கிரம் சூடாகாது. நீங்க டயர் மாத்தணும்னு நினைச்சா, பாதுகாப்புக்கும் வசதிக்கும் டியூப்லெஸ் டயரை தேர்ந்தெடுக்கிறதுதான் புத்திசாலித்தனம்.

Petrol Bikes : ஏப்ரல் 2028 முதல் பெட்ரோல் பைக்குகளுக்கு தடையா? அரசு எடுத்த அதிரடி முடிவு! எங்க தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories