ஹோண்டா தற்போது 150-160cc பிரிவில் யூனிகார்ன் மற்றும் SP160 என இரண்டு பைக்குகளை விற்பனை செய்கிறது. இந்த இரண்டு மாடல்களும் ஒரே 162.7சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு மோட்டார் மூலம் இயக்கப்படுகின்றன. யூனிகார்னில், இந்த எஞ்சின் 60 kmpl மைலேஜைத் தருகிறது, SP160 இல் 65 kmpl மைலேஜ் கொடுக்கிறது.