ஒரு லட்சம் இருந்தா போதும்... கெத்தா பைக் வாங்கலாம்! பல்சர் முதல் ஸ்பிளெண்டர் வரை வரிசை கட்டி நிக்குது!

First Published Jun 11, 2024, 10:51 PM IST

Best bikes under 1 lakh in India: உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன சந்தையாக உள்ள இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் பட்ஜெட் பைக்குகள் சிறப்பான வரவேற்பைப் பெறுகின்றன.

Best bikes under 1 lakh in India

நாட்டில் இருசக்கர வாகனங்கள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன சந்தையாகவும் இந்தியா மாறியுள்ளது. அதிக டிமாண்ட் கொண்ட ஒரு லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் பட்ஜெட் பைக்குகள் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

Hero Super Splendor

ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் இரண்டு வேரியண்களில் கிடைக்கிறது. டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக்குகளுடன் முறையே ரூ.80,248 மற்றும் ரூ.84,198 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வாங்கலாம். இந்த மோட்டார்சைக்கிளில் USB சார்ஜிங் போன்ற அம்சங்களுடன் டிஜிட்டல் கன்சோலும் உள்ளது.

Honda SP 125

ஒரு லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கக்கூடிய மற்றொரு பைக் ஹோண்டாவின் SP 125 ஆகும். இது ஐந்து ஸ்பீடு கியர்பாக்ஸுடன், பக்கவாட்டு எஞ்சின் கட்-ஆஃப் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டது. டிஜிட்டல் கிளஸ்டரும் உள்ளது. டிரம் பிரேக் வேரியண்ட் ரூ.86,000 (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் டிஸ்க் பிரேக் வேரியண்ட் ரூ.90,000 (எக்ஸ்-ஷோரும்) விலையில் கிடைக்கிறது.

TVS Sport

எரிபொருள் சிக்கனத்துக்கு முன்னுரிமை அளிப்பவர் என்றால் டி.வி.எஸ். ஸ்போர்ட் சிறந்த சாயஸ் தான். ரூ.60,306 எக்ஸ்-ஷோரூம் விலையில் மிகவும் மலிவுவாகக் கிடைக்கும் இந்த மோட்டார்சைக்கிள்கள் தினசரி பயணங்களுக்கு மிகவும் பொருத்தமானது.

Bajaj Pulsar 125

இந்திய சந்தையில் பல்சர் பைக் அறிமுகமான நாளில் இருந்தே மிகவும் பிரபலமாக உள்ளது. பல்சர் இப்போது பல எஞ்சின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு உள்ளது. 400cc பல்சர் மாடலையும் அறிமுகப்படுத்த பஜாஜ் நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த பைக்கின் விலை ரூ.90,771 (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.

Hero Xtreme 125R

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் இருசக்கர வாகன சந்தையில் சமீபத்தில் நுழைந்தது. இந்த 125சிசி பைக் சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் மூலம் இயங்குகிறது. லிட்டருக்கு 66 கி.மீ. மைலேஜ் வழங்கும். ஐபிஎஸ் வேரியண்ட் ரூ.95,000 (எக்ஸ்-ஷோரும்) விலையில் கிடைக்கிறது. ஏபிஎஸ் வேரியண்ட் ரூ.99,500 (எக்ஸ்-ஷோரும்) விலையில் வாங்கலாம்.

Latest Videos

click me!