அதிரி புதிரி சேல்ஸ்... கார் பிரியர்களைக் கவர்ந்த டாப் 5 எஸ்.யூ.வி. கார்கள்!

First Published | Jun 10, 2024, 5:41 PM IST

​​இந்தியாவில் ஸ்யூவி கார்களுக்கு கார் பிரியர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகியுள்ளது. இதன் விளைவாக, பயணிகள் வாகன சந்தையில் மொத்த விற்பனையில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக எஸ்.யூ.வி. கார்கள் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் மே மாதம் அதிகமாக விற்பனையான எஸ்.யூ.வி. கார்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

Maruti Suzuki Fronx

மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ்: மாருதி சுஸுகியின் ஃப்ரான்க்ஸ் கார் ஐந்தாவது சிறந்த விற்பனையான SUV ஆக உள்ளது. 12,681 யூனிட்டுகள் விற்பனையான இந்த கார், கடந்த ஆண்டை விட 29 சதவீதம் அதிகமாக விற்றுள்ளது.

Mahindra Scorpio

மஹிந்திரா ஸ்கார்பியோ: நான்காவது அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மஹிந்திரா ஸ்கார்பியோ ஆகும். ஸ்கார்பியோன் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் இரண்டும் மொத்தமாக 13,717 யூனிட்டுகள் வெளியாகியுள்ளன. இதன் விற்பனை 47 சதவீதம் உயர்ந்துள்ளது.

Tap to resize

Maruti Suzuki Brezza

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா: தொடர்ந்து சிறப்பாக விற்பனையாகி வரும் எஸ்.யூ.வி.யான மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மே மாமதம் 14,186 யூனிட் விற்பனையை பதிவு செய்தது. இது கடந்த ஆண்டை விட 6 சதவீதம் அதிகரித்துள்ளது.

Hyundai Creta

ஹூண்டாய் க்ரெட்டா: பத்து லட்சத்துக்கும் அதிகமான கிரெட்டா எஸ்.யூ.வி. கார்கள் சாலைகளில காணப்பட்டுகின்றனத வருகின்றன. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று தெரிகிறது. 14,662 யூனிட்கள் விற்படை செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இந்தக் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Tata Punch

டாடா பஞ்ச்: மே மாதம் டாடா பஞ்ச் எஸ்யூவி 70 சதவீத விற்பனை உயர்வைப் பதிவுசெய்தது. 18,949 யூனிட்கள் விற்பனையானதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

Latest Videos

click me!