2024 BMW S 1000 XR: 3 செகண்ட்ல 100 கி.மீ. வேகத்தில் பறக்கும் புதிய பிஎம்டபிள்யூ பைக்!

Published : May 22, 2024, 09:12 AM IST

புதிய பிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்.ஆர். (BMW S 1000 XR) பைக் இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ளதாக பி.எம்.டபிள்யூ. நிறுவனம் அறிவித்துள்ளது. BMW M 1000 XR பைக் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களில் அடுத்த அறிவிப்பு வந்துள்ளது.

PREV
13
2024 BMW S 1000 XR: 3 செகண்ட்ல 100 கி.மீ. வேகத்தில் பறக்கும் புதிய பிஎம்டபிள்யூ பைக்!
2024 BMW S 1000 XR

புதிய S 1000 XR விலை ரூ. 22.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இன்று முதல் அங்கீகரிக்கப்பட்ட BMW டீலர்களிடம் இந்த பைக்கை முன்பதிவு செய்யலாம்.

BMW S 1000 XR ஆனது பிளாக்ஸ்டார்ம் மெட்டாலிக், கிராவிட்டி ப்ளூ மெட்டாலிக் (ஸ்டைல் ஸ்போர்ட்ஸ் உடன்), ஒயிட் சாலிட் (எம் பேக்கேஜ் உடன்) ஆகிய வண்ணங்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.

23
2024 BMW S 1000 XR launch date

இந்த பைக் டூரிங் மற்றும் டைனமிக் பேக்கேஜுடன் வருகிறது. ரைடர் மோட்ஸ் ப்ரோ, ஹீட்டட் கிரிப்ஸ் மற்றும் ஹெட்லைட் ப்ரோ அடாப்டிவ் டர்னிங் லைட், க்ரூஸ் கன்ட்ரோல், கீலெஸ் ரைடு, TPMS, USB சார்ஜர் ஆகிய அம்சங்களும் உள்ளன.

பக்கவாட்டு பேனல்கள் மற்றும் முன்பக்க ஃபெண்டர் ஆகியவை மாற்றம் கண்டுள்ளன. இருக்கையும் அதிக இடவசதி இருக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

33
2024 BMW S 1000 XR price

இந்த பைக் 168 பிஎச்பி பவரையும் 114 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 999 சிசி, இன்லைன்-நான்கு சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த எஞ்சின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் விரைவான-ஷிஃப்டருடன் இணைக்கப்பட்டுள்ளது. மழை, சாலை, டைனமிக் மற்றும் டைனமிக் புரோ ஆகிய நான்கு ரைடிங் வகைகள் உள்ளன.

மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் இந்த பைக் வெறும் 3.25 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும் சக்தி கொண்டது. முன்புறத்தில் 320 மிமீ ட்வின்-டிஸ்க் பிரேக், பின்புறத்தில் 220 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக் இருக்கிறது.

click me!

Recommended Stories