ஆர்.டி.ஓ. ஆபீஸுக்கு அலையவே வேண்டாம்... டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய விதி அறிமுகம்!

First Published | May 21, 2024, 3:11 PM IST

மத்திய அரசு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விதிகளைத் தளர்த்தியுள்ளதால், இனி டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான சோதனை ஓட்டம் மேற்கொள்ளும் நடவடிக்கை எளிமையாகிறது.

Driving Licence Procedure

வழக்கமாக, ஓட்டுநர் உரிமம் வாங்க வேண்டுமென்றால் ஓட்டுநர் சோதனைக்காக ஆர்டிஓ அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். அதற்குப் பதிலாக தனியார் நிறுவனங்களே ஓட்டுநர் சோதனையை நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் சான்றிதழையும் அந்த நிறுவனமே வழங்கலாம்.

தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான அங்கீகாரம் அளிப்பதால், வாகனப் பயிற்சி மையங்களின் தரம் உயரவும் வாய்ப்பு ஏற்படும் என்றும் கருதப்படுகிறது.

Driving Licence

ஜூன் 1ஆம் தேதியில் இருந்து இந்த முறை செயல்பாட்டுக்கு வரும். அப்போது இந்த முறையை பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். https://parivahan.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இணைதளத்தில் உள்ள டிரைவிங் லைசென்ஸ் பகுதியில் விண்ணப்ப படிவத்தை நிரப்பி, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும். ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.

Latest Videos


Driving Licence rules

கற்றல் உரிமம் (LLR) ரூ.200,  கற்றல் உரிமம் புதுப்பித்தல் (LLR Renewal) ரூ.200, சர்வதேச உரிமம் ரூ.1000, நிரந்தர உரிமம் ரூ.200 லைசென்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படும்.

தனியார் பயிற்சி மையங்கள் ஓட்டுநர் பயிற்சி உரிமம் வழங்க தகுதி பெறவேண்டும் என்றால் குறைந்தபட்சம் 1 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். 4 சக்கர வாகனத்திற்கு லைசென்ஸ் கொடுக்க அனுமதி வேண்டும் என்றால் மேலும் 2 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.

RTO office and Driving Licence

இது தவிர ஓட்டுநர் சோதனை நடத்துவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும். பயிற்சியாளர் குறைந்தபட்சம் உயர்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பயிற்சியாளர் குறைந்தது 5 ஆண்டுகள் வாகனங்களை ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பயோமெட்ரிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படைகளை பயிற்சியாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

Private Driving Schools

இலகு ரக வாகனப் பயிற்சியை குறைந்தபட்சம் 29 மணிநேரம் முதல் அதிகபட்சம் 4 வாரங்களுக்குள்  முடிக்க வேண்டும். குறைந்தது இரண்டு பிரிவுகளாகப் பயிற்சியை நடத்த வேண்டும். தியரி பயிற்சி 8 மணிநேரம், பிராக்டிகல் பயிற்சி 21 மணிநேரமும் இருக்க வேண்டும்.

கனரக வாகனங்களுக்கு குறைந்தது 38 மணிநேர பயிற்சி கட்டாயம். 8 மணிநேரம் தியரியும், 31 மணிநேரம் பிராக்டிகல் பயிற்சியும் தேவை. 6 வாரங்களுக்குள் இந்தப் பயிற்சியை முடித்துவிட வேண்டும்.

click me!