தாறுமாறாக விலையை உயர்த்திய மஹிந்திரா! இனி ஸ்கார்பியோ, பொலேரோ கார்களை வாங்க முடியுமா?

First Published | May 21, 2024, 12:36 PM IST

மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் மஹிந்திரா தார், ஸ்கார்பியோ-என் மற்றும் பொலிரோ நியோ எஸ்யூவிகளின் விலையை உயர்த்தியுள்ளது.

Mahindra and Mahindra price hike

மஹிந்திரா மற்றும் மஹிந்திரா (Mahindra and Mahindra) நிறுவனம் இந்தியாவில் மஹிந்திரா தார் (Thar), ஸ்கார்பியோ-என் (Scorpio-N) மற்றும் பொலிரோ நியோ (Bolero-Neo) எஸ்யூவிகளின் விலையை உயர்த்தியுள்ளது. ஸ்கார்பியோ-என் ரூ.25,000, தார் ரூ.14,000, பொலிரோ நியோ ரூ.10,000 விலை உயர்ந்துள்ளது.

Mahindra Thar Price hike

மகிந்திரா தார் (Thar) காரின் என்ட்ரி லெவல் மாடல்களுக்கு மட்டும் ரூ.10,000 விலை உயர்ந்துள்ளது. அதாவது ரூ. 11.25 லட்சத்தில் இருந்து ரூ. 11.35 லட்சமாக அதிகரித்துள்ளது. மற்ற வேரியண்ட்களின் விலைகள் அப்படியே இருக்கிறது.

Tap to resize

Mahindra Scorpio-N Price hike

மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Scorpio-N) எஸ்யூவி Z2, Z4, Z6, Z8, Z8S, Z8L ஆகிய வேரியண்டகளில் கிடைக்கிறது. Z2 மற்றும் Z4 ஆகியவற்றின் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கும், Z6 வேரியண்ட் டீசல் காருக்கும் ஒரே மாதிரியான விலை உயர்வாக ரூ.25,000 கூடியிருக்கிறது.

Mahindra Scorpio-N Price in India

மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Scorpio-N) Z8 வேரியண்ட் காரும் ரூ. 10,000 விலை உயர்ந்துள்ளது. ஸ்கார்பியோ-என் கார் ரூ.13.85 லட்சம் முதல் ரூ.24.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை விற்பனை செய்யப்படுகிறது.

Mahindra Bolero Neo Price hike

மஹிந்திரா பொலிரோ நியோ (Bolero-Neo) N4, N8, N10, N10 (O) ஆகிய வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. N10, N10 (O) இரண்டின் விலையும் விலை முறையே ரூ. 5,000 மற்றும் 14,000 விலை உயர்ந்திருக்கிறது. இதனால் இந்த எஸ்யூவியின் இப்போதைய குறைந்தபட்ச விலை ரூ.9.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

Latest Videos

click me!