TATA : ஆஹா அட்டகாசம்.. தன் 2 கார்களுக்கு 1.25 லட்சம் வரை தள்ளுபடி தரும் டாடா - எந்த இரு கார்களுக்கு தெரியுமா?

First Published | Jun 6, 2024, 9:44 PM IST

TATA Best Offers : பிரபல டாடா நிறுவனம் 2023ம் ஆண்டு மாடல் கார்களை சுமார் 1.25 லட்சம் தள்ளுபடியில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் காணலாம்.

Tata Cars

பிரபல டாடா மோட்டார்ஸ் தனது சஃபாரி மற்றும் ஹாரியர் கார்களின் MY2023 (Model Year 2023) மாடல்களுக்கு இந்த ஜூன் மாதத்தில் கணிசமான தள்ளுபடியை வழங்குகிறது. மேலும் இந்த தள்ளுபடிகள் மற்றும் நன்மைகள் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி உட்பட பல மாடல்களுக்கு கிடைக்கின்றன. சரி நீங்கள் வாங்கப்போகும் உங்கள் புதிய டாடா கார் அல்லது எஸ்யூவியில் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதை இப்பொது காணலாம்.

ரூ. 80 ஆயிரத்தை விட குறைந்த விலையில் அதிக மைலேஜ் கொடுக்கும் தரமான 5 ஸ்கூட்டர்கள் - லிஸ்ட் இதோ!

TATA Safari

டாடா சஃபாரி - 1.25 லட்சம் வரை பலன்கள்கடந்த 2023ல் தயாரிக்கப்பட்ட டாடா சஃபாரியின் Face Lift மாடல்கள் ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடியுடன் விற்பனையாகும். இந்த SUV ஆனது 170hp மற்றும் 350Nm ஆற்றலை உருவாக்கும் 2.0-லிட்டர் டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, மேலும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Harrier

டாடா ஹாரியர்

ஃபிளாட் கேஷ் டிஸ்கவுண்ட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் அல்லது ஸ்கிராபேஜ் போனஸ் உட்பட, ஃபேஸ் லிஃப்டுக்கு முந்தைய ஹாரியரில், டாடா ரூ.1.25 லட்சம் தள்ளுபடியை வழங்குகிறது. ஐந்து இருக்கைகள் கொண்ட டாடாவின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி, சஃபாரி போன்ற பவர்டிரெய்ன் விருப்பங்களைப் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமல்லாமல், டாடா தனது Nexon, Tiago, Tigor போன்ற கார்களுக்கு 80,000 முதல் 90,000 வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய ZELIO Ebikes.. ரொம்ப ரொம்ப கம்மி விலை தெரியுமா?

Latest Videos

click me!