பட்டைய கிளப்பும் மைலேஜ்! லிட்டருக்கு 73 கி.மீ.! சாமானியனின் கனவு பைக் இதுதான்!!

First Published Jun 11, 2024, 7:57 PM IST

ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்த Hero Splendor XTEC 2.0 இந்திய இருசக்கர வாகன சந்தையின் மைலேஜ் கிங் பைக்காக வலம் வருகிறது. சாமானியர்கள் வாங்க விரும்பும் கனவு பைக்காகவும் உள்ளது. இதன் விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

Hero Splendor+ XTEC 2.0

உலகின் மிகப்பெரிய பைக் மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், ஸ்பிளெண்டர் பைக்கின் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. Hero Splendor + XTEC 2.0 என்ற பெயரில் இந்த பைக் விற்பனைக்கு வந்துள்ளது.

Hero Splendor+

உலகிலேயே அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் ஒன்றான ஸ்பிளெண்டர் பைக்கின் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாட இந்த புதிய மாடல் பல நவீன அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

Hero Splendor+ XTEC 2.0 bike review

புதிய ஹீரோ Splendor Plus 7.9 bhp பவரையும் 8.05 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் 100cc i3s எஞ்ஜின் மூலம் இயங்கக்கூடியது. இதில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. இந்த பைக் 5 ஆண்டுகள் அல்லது 70,000 கிமீ வாரண்டியுடன் வருகிறது. 6000 கிமீ வரை சர்வீஸ் செய்யவே தேவையில்லை என்றும் ஹீரோ நிறுவனம் கூறுகிறது.  

Hero Splendor+ XTEC 2.0 price in India

இந்த புதிய பைக் லிட்டருக்கு 73 கி.மீ. என்ற அற்புதமான மைலேஜ் கொடுக்கிறது. இந்த புதிய அப்டேட் ஸ்பிளெண்டர்+ XTEC 2.0 ஐ நகரம் மற்றும் கிராமப்புற பயணிகளுக்கு சிறந்த தேர்வாக மாற்றுகிறது.

Hero Splendor+ XTEC 2.0 specs

புது அவதாரம் எடுத்துள்ள Splendor+ XTEC 2.0 ஒரு புதிய தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இதில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் இருக்கிறது. போன் கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட், புளூடூத் இணைப்பு ஆகிய வசதிகளும் உள்ளன.

Hero Splendor+ XTEC 2.0 mileage bike

இந்த பைக்கில்  பாதுகாப்புக்காக அபாய விளக்குகள், பக்கவாட்டு இன்ஜின் கட்ஆஃப் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் Splendor+ XTEC 2.0 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.82,911. 

Latest Videos

click me!