எலக்ட்ரிக் வாகனத்திற்கு மாறப்போறீங்களா? அப்போ இத பாருங்க - இந்தியாவின் விலை மலிவான E-Scooters லிஸ்ட் இதோ!

First Published | Nov 14, 2023, 11:30 AM IST

Top 5 Cheapest E-Scooters In India : இந்தியாவில் பல இடங்களில் ஏற்பட்டு வரும் காற்று மாசு காரணமாக அதற்கான அனைத்து வகையிலான மாற்று வழிகளை தேடி வருகிறது இந்திய அரசு. அந்த வகையில் எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் பயன்படுத்த ஊக்குவித்து வருகிறது இந்திய அரசு.

TVS IQube

இந்தியாவில் பெருகிவரும் காற்று மாசு காரணமாக எலக்ட்ரிக் வகை வாகனங்களை பயன்படுத்த அரசு மக்களை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், மின்சார வாகனங்களை பயன்படுத்த அதற்கான தேவையான பல்வேறு ஏற்பாடுகளை தொடர்ச்சியாக செய்து வருகிறது. இந்நிலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க விரும்பும் நபர்களுக்காகவே இந்த பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனையில் உள்ள விலை மிகவும் மலிவான டாப் 5 ஈ ஸ்கூட்டர்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

TVS iQube

இந்த iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அடிப்படை விலை ரூ. 1,00,777 (ஆன்-ரோடு, புது தில்லி), முன்பதிவு தொகையாக ரூ. 5,000 செலுத்தி இந்த பைக்கை நீங்கள் எடுத்துச்செல்லலாம். கூடுதலாக TVS SmartXHome ஹோம் சார்ஜிங் யூனிட் இதில் உள்ளது. ஆனால் அதைத் தனியாக ரூ.11,238 கொடுத்து நீங்கள் வாங்க வேண்டும்.

இது சூப்பர் கான்செப்ட்... வீல் சேர் வசதியுடன் சூப்பர் ஸ்மார்ட் கார்! ஆனந்த் மஹிந்திரா ஆச்சரியம்!

Ampere Zeal EX

Ampere Zeal EX

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த Ampere Zeal EX ஆனது மத்தியப் பிரதேசம், பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்கண்டில் ரூ. 69,900 (எக்ஸ்-ஷோரூம்) விலையிலும், இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு ரூ. 75,000 (எக்ஸ்-ஷோரூம்) விலையிலும் கிடைக்கிறது. ஆம்பியரின் தாய் நிறுவனமான க்ரீவ்ஸ் மொபிலிட்டி, முன்னதாக மார்ச் 31, 2023க்கு முன் Zeal EXஐ வாங்கும் நபர்களுக்கு ரூ.6,000 மதிப்புள்ள கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

OLA S1

OLA S1

இந்த OLA ஸ்கூட்டரின் விலை அது விற்கப்படும் ஒவ்வொரு சந்தையையும் பொறுத்தது. அதாவது டெல்லியில், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எஸ்1னின் ரூ.85,099 ஆகும். ஆனால் குஜராத்தில், இது ரூ.79,999 என்ற மலிவான விலையில் விற்பனையாகிறது. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இதன் விலை மாறுபடும். இந்த OLA S1 வெள்ளை, மஞ்சள், நீலம், கருப்பு மற்றும் சிவப்பு உட்பட ஐந்து வெவ்வேறு வண்ணங்களில் வருகிறது.
 

Bounce Infinity E1

Bounce Infinity E1

பவுன்ஸ் இன்பினிட்டி E1 என்பது பெங்களூருவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘பவுன்ஸ்’ அறிமுகம் செய்த முதல் மின்சார ஸ்கூட்டர் ஆகும். இந்த வண்டிகளுக்கு பேட்டரி அவசியமில்லை, எனவே சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமுமில்லை. காரணம் இது "பேட்டரி ஸ்வாப்" முரையில் இயங்குகிறது, ரூபாய் 35 செலவில் பயனர்கள் பேட்டரி ஸ்வாப் செய்துகொள்ளலாம். சுமார் 70,000 ரூபாய்க்கு இப்பொது இது விற்பனை செய்யப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Rivot NX100

Rivot NX100

இந்த நிறுவனம் தனது முதல் மின்சார ஸ்கூட்டரான NX100ஐ 23 அக்டோபர் 2023 அன்று பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்வின் மூலம் அறிமுகப்படுத்தியது. இந்த இரு சக்கர வாகனம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது மற்றும் ரூ.89,000 (எக்ஸ்-ஷோரூம்) விலை தொடங்கி விற்பனைக்கு வருகின்றது. இந்த ஸ்கூட்டர் ஐந்து வகைகளில் கிடைக்கும். அடிப்படை மாறுபாடு 1,920Wh பேட்டரி பேக்கைப் பெறும், மேலும் 100கிமீ வேகம் வரை செல்லக்கூடியது இது. 

மைலேஜ் கிங்காக களமிறங்கும் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்! ரீலீஸ் தேதி எப்போது?

Latest Videos

click me!