Ather 450X: வெற லெவல் ஸ்டைலில் கண்ணாடி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! அசத்தும் ஆட்டோமோட்டிவ் கிளாஸ் பேனல்!

First Published | Nov 11, 2023, 6:03 PM IST

ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் ஏதர் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டிரான்ஸ்பரெண்ட் பேனல்களுடன் வித்தியாசமான வடிவமைப்புடன் மீண்டும் விற்பனைக்கு வரப் போகிறது.

ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் ஏதர் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டிரான்ஸ்பரெண்ட் பேனல்களுடன் வித்தியாசமான வடிவமைப்புடன் மீண்டும் விற்பனைக்கு வரப் போகிறது. அந்த நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான தருண் மேத்தா இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஏதர் 450X ஸ்கூட்டரின் கலெக்டர்ஸ் எடிஷனை விற்பனை செய்து வந்தது. இந்த சிறப்பு மாடல் கண்ணாடி பேனல்களுடன் வடிவமைக்கப்பட்டது. இதன் மூலம் பேனல்களுக்குள் இருக்கும் உள்பாகங்களை வெளிப்படையாகப் பார்க்க முடியும். ஆனால், ஏதர் 450S ஸ்கூட்டரும் இதேபோன்ற டிரான்ஸ்பரெண்ட்டான பேனல்களுடன் வெளியிடப்படுமா என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை.

Ather 450X

கலெக்டர்ஸ் எடிட்டன் 2020இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அது கருப்பு நிறத்தில் பளபளப்பான தோற்றத்தில் வடிமைக்கப்பட்டது. இந்த பைக்கின் கண்ணாடி பேனல்கள் ஆட்டோமோட்டிவ் கிரேட் பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்டவை.

450X தற்போது கருப்பு, பச்சை, சாம்பல், வெள்ளை, சிவப்பு என ஆறு நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. 450X ஸ்கூட்டருக்கு மட்டுமே ட்ரூ ரெட் மற்றும் லூனார் கிரே விண்ண மாடல்கள் கிடைக்கின்றன. இந்த வண்ணத்திலான மாடல்கள்  450S ஸூகூட்டருக்குக் இல்லை.

Tap to resize

Ather 450X

சமீபத்தில் ஏதர் தனது முதல் சர்வதேச சில்லறை விற்பனை நிலையத்தை நேபாளத்தில் திறந்ததாக அறிவித்தது. அண்டை நாடுகளில் ஏதர் ஸ்கூட்டர்கள் விற்பனையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. முதல் கட்டமாக ஏதர் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தான் நேபாளத்தில் விற்பனை செய்ய உள்ளது. காத்மாண்டுவில் முதல் விற்பனை நிலையத்தைத் திறந்த நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் இரண்டாவது விற்பனை நிலையத்தையும் திறக்க உள்ளது.

நேபாளத்தில் உள்ள கடைக்காக ஏதர் எனர்ஜி நிறுவனம் வைத்யா எனர்ஜி நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. ஏதர் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நேபாளத்தில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் ஏதர் கூறியுள்ளது.

Latest Videos

click me!