ஒரு காருக்குள் இத்தனை வசதியா! EV மார்க்கெட்டில் மிரட்டலான என்டரி கொடுத்த லோட்டஸ்!

First Published | Nov 9, 2023, 6:00 PM IST

லோட்டஸ் நிறுவனம் தனது லோட்டஸ் எலெட்ரே (Lotus Eletre) எலக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.2.55 கோடி முதல் ரூ. 2.99 கோடி வரை விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

Lotus Eletre launch in India

பிரிட்டிஷ் கார் நிறுவனமான லோட்டஸ் அதன் எலக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தனது வருகையைப் பதிவுசெய்துள்ளது.

லோட்டஸ் எலெட்ரே (Lotus Eletre) இந்தியாவில் மூன்று டிரிம்களில் விற்கப்படும். அடிப்படையான மாடல் ரூ. 2.55 கோடி, எலெட்ரே S ரூ. 2.75 கோடி மற்றும் எலெட்ரே R ரூ. 2.99 கோடி விலையில் கிடைக்கும்.

Lotus Eletre in India

டெல்லியைச் சேர்ந்த எக்ஸ்க்ளூசிவ் மோட்டார்ஸ் நிறுவனம் லோட்டஸ் கார்களுக்கான அதிகாரப்பூர்வ விநியோகஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மூலம் லோட்டஸ் கார்களை நாடு முழுவதும் வாங்கலாம்.

லோட்டஸ் நிறுவனம் விரைவில் எமிரா (Emira) என்ற தனது மிட்-இன்ஜின் ஸ்போர்ட்ஸ் காரை இந்தியாவிற்கு கொண்டுவர இருப்பதாகவும் உறுதி செய்துள்ளது. எமிரா ஸ்போர்ட்ஸ் கார் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 2.0 லிட்டர் இன்லைன்-4 மற்றும் சூப்பர்சார்ஜ் V6 என இரண்டு பவர்டிரெய்ன் வேரியண்ட்களைக் கொண்டது.

Latest Videos


Lotus Eletre in India

2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகளவில் வெளியிடப்பட்ட எலெட்ரே லோட்டஸ் நிறுவனத்தின் முதல் SUV கார் ஆகும். இது ஒரு தனித்துவமான ஸ்போர்ட்டி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. கார் சிவப்பு, பச்சை, கருப்பு, சாம்பல், மஞ்சள் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

பின்புறத்தில் முழு நீள LED லைட் பார் உள்ளது. இது டெயில் லைட்களுடன் சேரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏர் டேம்கள், ஸ்லோபிங் ரூஃப்லைன், பிளாக்டு-அவுட் ரியர் பம்ப்பர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

Lotus Eletre in India

இந்தக் எலெக்ட்ரிக் கார் நான்கு மற்றும் ஐந்து பேர் அமரக்கூடிய சீட்டிங் அமைப்புகளில் கிடைக்கிறது. உள்பக்கத் தோற்றத்தை ஆறு விதமான ஸ்டைல்களில் மாற்றி அமைக்கும் வசதி இருக்கிறது. அதுவும் இந்த வசதி முழுக்க முழுக்க 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளன என்று லோட்டஸ் கூறுகிறது.

இதன் உள்புறத்தில் இருக்கும் மடிக்கக்கூடிய 15.1 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம் லோட்டஸ் ஹைப்பர் ஒ.எஸ். மூலம் இயங்குகிறது. நான்கு விதமான கிளைமேட் கண்ட்ரோல், 12 வழிகளில் அட்ஜஸ்டு செய்யக்கூடிய முன்புற இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர் ஆகிய கவர்ச்சிகரமான அம்சங்கள் உள்ளன. இத்துடன் ADAS சூட், ஏர் பியூரிஃபையர், மல்டி-கலர் லைட்டிங், 15 ஸ்பீக்கர்கள் கொண்ட அடங்கிய சவுண்ட் சிஸ்டம் என அசத்தலான உள்புள வடிவமைப்பு காணப்படுகிறது.

click me!